வேலுமணியை கைது செய்யாதது ஏன்? முதல்வரை கேள்வி எழுப்பும் மக்கள் நீதி மையம்!

0
88

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி சென்னை கோவை போன்ற 60 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையை எடுத்து வேலுமணி கைது செய்யப்படுவார் என்று லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரத்தில் எதிர்பார்த்து இருந்தார்கள். இந்தநிலையில், வேலுமணி கைது செய்யப்படவில்லை மாறாக அவர் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை முடிந்த பின்னர் கொடுத்த அறிக்கையை பொய் என கூறிவிட்டு தன்னிடம் இருந்து எந்த விதமான பணம் கைப்பற்றப்படவில்லை எனவும், அவர் மறுப்பு தெரிவித்தார். இதனை சட்ட ரீதியாக சந்திப்பேன் என தெரிவித்துவிட்டு கோயம்புத்தூர் புறப்பட்டுச் சென்றார் வேலுமணி. அவருக்கு கோயம்புத்தூரில் மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், கமல்ஹாசன் தலைமை ஏற்று இருக்கும் மக்கள் நீதி மையம் கட்சியின் மாநில செயலாளரும் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் செயல்பாட்டாளர்கள் ஒருவருமான செந்தில் ஆறுமுகம் இன்றைய தினம் ஒரு சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார். அதாவது மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக இன்று அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அந்த அறிக்கையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி ஒப்பந்தம் செய்தது ஊழல் செய்து தனக்கு வேண்டியவர்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்குமாறு பார்த்துக் கொண்டார் என தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தனர். அதனை நிரூபிக்கும் விதத்தில் பல நூறு கோடி ஊழல் நடந்திருக்கிறது. என்பதை அறப்போர் இயக்கம் மிக வலுவான ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் 7 மணிக்கு தொடர்பு இருக்கின்ற இடங்களில் சோதனை நடத்தினர். ஆனாலும் வேலுமணியோ மிகவும் சுதந்திரமாக சுற்றி வந்து கொண்டிருக்கிறார் என தெரிவித்திருக்கின்றார்.

லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்திருக்கின்ற முதல் தகவல் அறிக்கை மற்றும் வெளியாகி இருக்கின்ற ஆதாரங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இருந்து பார்த்தால் வேலுமணி செய்து இருப்பது சாதாரணம் கிடையாது. எங்கள் கொண்ட கம்ப்யூட்டரில் இருந்து சகோதர நிறுவனங்களின் பெயர்களில் இருந்து ஒப்பந்தம் கோரப்பட்டு இருக்கிறது. ஒப்பந்தம் விடுத்த தனக்கு மிகவும் நெருக்கமானவர்களின் நிறுவனங்கள் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருக்கின்றன. பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் இருக்கின்ற ஒப்பந்தங்கள் முறைகேடாக கொடுக்கப்பட்டிருக்கின்றன. தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒப்பந்த விதிமுறைகள் தாராளமாக தளர்த்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு முறைகேடு பட்டியல் விரிவாக போய்க்கொண்டு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும், முன்னாள் அமைச்சர் வேலுமணியின் அரசியல் பலத்தை கருத்தில் கொண்டும், அவரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும். அவ்வாறு கைது செய்யாமல் தாமதித்தால் ஊழல் குறித்த ஆவணங்களை அழிப்பது, சாட்சிகளை கலைப்பது, வழக்கின் விசாரணைக்கு இடையூறுகளை உண்டாக்குவது, போன்றவற்றை வேலுமணி முன்னெடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அதோடு மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் ஊழல்வாதிகள் விரைவாக சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்ற செய்திதான் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் தொடர்ச்சியாக லஞ்சம் மற்றும் ஊழல் ஈடுபட்டு வருவோருக்கு கொடுக்கப்படும் எச்சரிக்கையாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.