நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா? முன்னாள் அமைச்சருக்கு சரமாரி கேள்வி எழுப்பிய முதலமைச்சர்!

0
77

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான இன்று காலை 10 மணி முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. காலை 10 மணி அளவில் அவை கூறியவுடன் மறைந்த முன்னாள் சட்ட சபை உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை அடுத்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.தொடர்ந்து 2021 மற்றும் இருபத்தி இரண்டாம் நிதியாண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை உள்ளிட்டவற்றின் மீதான விவாதம் ஆரம்பமானது. அதிமுகவின் சார்பாக சட்டசபை உறுப்பினர் ஆர் பி உதயகுமார் விவாதத்தை ஆரம்பித்தார்.

நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை கவனித்தோம் என தெரிவித்த ஆர் பி உதயகுமார் பொது மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் நிதி நிலை அறிக்கையை தயார் செய்யும் சமயத்தில் குட்டி பூனை தாய் பூனை கவ்வுவது போல இருக்கவேண்டும். ஆனால் தற்சமயம் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்ற இந்த அறிக்கை பூனை எலியை கவ்வுவது போல இருக்கிறது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் எனக்கு பொருளாதாரம் தெரியாது ஆனால் பொதுமக்களின் பசியும் ஏழ்மை பற்றி நன்றாகவே தெரியும் என தெரிவித்தார். அதிமுக ஆட்சி காலத்தில் 715 திட்டங்களில் 537 திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நிதி நிலையை காரணம் காட்டி வாக்குறுதிகளை விட்டுவிட வேண்டாம் இனிமேலாவது வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் இருந்து நாங்கள் பின்வாங்கிய தாக்க பல கருத்துக்கள் உருவாகிவருகிறது. 100 தினங்கள் நிகழ்வுகளை எல்லாம் நாங்கள் தெளிவாக சொல்லி இருக்கின்றோம். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் நாங்கள் பின்வாங்க மாட்டோம் என்று தெரிவித்திருக்கிறார்.வெள்ளை அறிக்கையிலும், நிதிநிலை அறிக்கையிலும், சொல்லியிருப்பது போல நகை கடன் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை இதற்கு செய்ததிலும் பல முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் சென்ற ஆட்சிக்காலத்தில் நடைபெற்று வருகிறது. அதனை சரி செய்து எங்களுடைய வாழ்க்கையை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்று தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.

அதிமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதா என கேட்ட முதலமைச்சர் ஸ்டாலின் செல்போன் ஆவின்பால் விலை 25 ரூபாய்,மக்களுக்கு அம்மா குடிநீர், குறைந்த விலையில் மளிகை பொருட்கள், அனைத்து பொது இடங்களிலும் வைஃபை வசதி ,பட்டு ஜவுளி பூங்கா, சென்னை மோனோ ரயில் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டதா என கேள்வி எழுப்பி அந்த ரயில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பதிலாக கருணாநிதி அவர்கள் கொண்டு வந்த மெட்ரோ ரயில் திட்டத்தை தான் நிறைவேற்றினார்கள் என்று கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.