கடந்த ஆண்டைவிட 5 லட்சம் பத்தர்கள் அதிகம்!! 37 நாள்களில் 30 லட்சம் பக்தர்கள் சாமிதரிசனம்!!

0
82

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை 1 முதல் 41 நாட்கள் மண்டல பூஜை காலம் அனுசரிக்கப்படுகிறது. 41-வது நாள் மண்டல பூஜை நடக்கிறது. இந்த ஆண்டு மண்டல பூஜை நவம்பர் 16-ல் தொடங்கியது. அதற்கு முதல் நாள் மாலை சபரிமலை ஐயப்பன் சன்னிதானம்  நடை திறக்கப்பட்டது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி ஏந்தி பம்பை வழியாகவும் புல்மேடு, எரிமேலி வழியாகவும் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர்.

கடந்த ஆண்டு போல் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் தரிசனம் செய்து திருப்புகின்றனர். இருப்பினும் கடந்த ஆறு நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரு நாளைக்கு  93,210  பக்தர்கள் வரை தரிசனம் செய்கின்றனர். இதனால் சில மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சரகுத்தியில் இருந்து பக்தர்கள் கட்டம் கட்டமாக அனுப்பப்பட்டனர். டிசம்பர் 22-ம் தேதி  இரவு 10 மணி வரை 29 லட்சம் பக்தர்கள்  தரிசனம் செய்த்துள்ளனர்.

மண்டல பூஜைக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் சபரிமலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவரம் அடைந்துள்ளது. வரும் டிசம்பர் 26-இல் மண்டல பூஜை நடக்கிறது. அன்று அதிகாலை 3:30 மணிக்கு தொடங்கும் நெய்யபிஷேகம் காலை 11 மணியுடன் முடியும். மதியம் 12 மணிக்கு தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை நடக்கும். அதன் பிறகு அடைக்கப்படும் நடை மகர விளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30-ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.

Previous articleஉறுதியானது பும்ராவின் கேப்டன்ஷிப்.. காயத்தால் வெளியேறும் ரோகித் சர்மா!! நடந்தது என்ன??
Next articleஜடேஜா மீது எழுந்த பெரிய சர்ச்சை.. ரத்தான போட்டி!! உண்மையில் நடந்தது என்ன??