மத்திய அரசின் 5 லட்சம் காப்பீட்டு அட்டை.. உடனே பெறுவது எப்படி!!

0
126

மத்திய அரசின் 5 லட்சம் காப்பீட்டு அட்டை.. உடனே பெறுவது எப்படி!!

நம் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு தேவையான ஒன்றாக உள்ளது.தற்போதைய காலகட்டத்தில் வித விதமான நோய்கள் நம்மை பாதித்து வருகிறது.இதனால் மருத்துவ செலவு அதிகரித்து வருகிறது.இந்த மருத்துவ செலவுகள் நம் வருமானத்தை மீறிய ஒன்றாக உள்ளது.நம் சேமிப்பு,எதிர்கால கனவிற்காக நாம் வைத்திருந்த பணம் முழுவதும் மருத்துவ செலவிற்கு சென்று விட்டால் நம் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்.

நம் நாட்டில் ஏழை எளிய மக்கள் அதிகம் உள்ளனர்.அவர்களால் மருத்துவ செலவு மேற்கொள்வது முடியதாக ஒன்றாக உள்ளது.தங்கள் பிள்ளைகளுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டால் கூட அவர்களை மருத்துவமனைக்கு அழைத்தும் செல்லும் அளவிற்கு பெரும்பாலான பெற்றோர்களிடம் பணம் இல்லை என்பது தான் உண்மை.

இதை கருத்தி கொண்டு அனைத்து மக்களுக்கு உதவும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு “ஆயுஷ்மான் பாரத் யோஜனா” என்ற காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு தொடங்கி வைத்தது.இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.5,00,000 வரை இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது.இதற்காக மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.8000 கோடி நிதியை ஒதுக்கி வருகிறது.

மத்திய அரசு வழங்கும் காப்பீட்டு அட்டை மூலம் மொத்தம் 1354 சிகிச்சைகளுக்கு இலவச மருத்துவம் பார்த்துக் கொள்ள முடியும்.இந்த திட்டத்தில் சுமார் 17,000 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டிற்கிறது.

ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வது எப்படி?

முதலில் healthid.ndhm.gov.in என்ற மத்திய அரசின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும்.

பிறகு Create ABHA number என்பதற்கு உங்கள் ஆதார் எண்ணை பதிவிடவும்.இப்பொழுது ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி எண் அனுப்பப்படும்.அதை பதிவிட்டு பதிவிட்டு உள் நுழையவும்.பின்னர் கேட்கப்படும் விவரங்களை சமர்ப்பித்து உங்களுக்கான மருத்துவ காப்பீடு அட்டையை டவுன்லோடு செய்து கொள்ளவும்.