முதல் நாளில் 5 லட்சம் பேர் தரிசனம்! அயோத்தியில் அலைமோதும் மக்கள் கூட்டம்!
புதிதாக கட்டப்பட்டுள்ள ஆலயத்தில் ராமர் கோயில் முதல் நாளான நேற்று(ஜனவரி23) மட்டும் 5 லட்சம் மக்கள் பால ராமரை தரிசனம் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
அயோத்தியில் புதிதாக கட்டுப்பட்டுள்ள பால ராமர் கோயிலுக்கு கடந்த ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் பால ராமர் சிலை பிரதிஷ்டையும் அன்று செய்யப்பட்டது. பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி அவர்கள் முதல் மரியாதை செய்தார். மேலும் இவ்விழாவில் நடிகர்கள் ரிஷப் ஷெட்டி, தனுஷ், ரஜினிகாந்த் மற்றும் பல அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்னரே மக்கள் பால ராமரை ஜனவரி 23ம் தேதி முதல் தரிசனம் செய்வதற்கு கோயிலுக்கு வருகை தரலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று(ஜனவரி 23) அனைத்து ராமர் கோயிலில் தரிசனம் செய்வதற்காக மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து முதல் நாளான நேற்று(ஜனவரி23) காலை 6 மணிக்கு அயோத்தி பால ராமர் கோயிலின் நடை திறக்கப்பட்டது. சூரியன் உதிக்கும் நேரத்தில் பால ராமரை தரிசனம் செய்ய பொதுமக்கள் அதிகாலை 3 மணி முதலே காத்துக் கொண்டிருந்தனர்.
பொது மக்கள் தரிசனம் செய்வதற்கு அயோத்தி ராமர் கோயில் இரவு 10 மணி வரை திறக்கப்பட்டிருந்தது. இரவு 10 மணி வரை கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில் மக்கள் கூட்டம் அலை மோதியது. இருப்பினும் எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
அயோத்தி பால ராமர் கோயிலில் பொது மக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்ட முதல் நாளிலேயே 5 லட்சம் மக்கள் பால ராமரை தரிசனம் செய்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அனைத்து பக்தர்களும் தரிசனத்திற்காக அனுமதிக்கபடுவார்கள் என்றும் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறும் கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இரண்டாவது நாளான இன்றும்(ஜனவரி24) அயோத்தி ராமர் கோயிலில் தரிசனத்திற்காக மக்கள் கூட்டம் அலை மோதுகின்றது.