தமிழகத்தில் 5 லட்சம் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் காலி! பாராளுமன்றத்தில் மத்திய அரசு அதிர்ச்சி தகவல்.
தமிழகம் அல்லாத பிற மாநிலங்களில் தமிழாசிரியர் பணியிடங்கள் காலி விவரங்களும் வெளியீடு.
மும்மொழி கொள்கையை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்றும் மத்திய அரசு அழுத்தம்.
தமிழகத்தில் அரசு பள்ளிகள் , அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 5 லட்சத்து 69 ஆயிரம் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவலை தெரிவித்து இருக்கிறது .
இது மட்டுமில்லாமல் ஆந்திரா , சட்டீஸ்கர், டெல்லி, கோவா, குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இயங்கும் பல வகையான பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லோக்சபாவில், ஒடீஷாவை சேர்ந்த சந்திரசேகர் சாகு என்ற உறுப்பினர் , புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் மாநிலங்களில், மாநில மொழிப்பாடத்தில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களை விவரங்களை கேட்டிருக்கிறார்.
அதற்கு கல்வி அமைச்சர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என்றும், மும்மொழி கொள்கையை அந்தந்த மாநிலங்கள் அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளர் மத்திய கல்வி அமைச்சர்.
அந்தந்த மாநில மொழிகளில் மொழிபாட ஆசிரியர்களை நியமனம் செய்வது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். நாடு முழுவதும் அரசு பள்ளிகள் , அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் அந்தந்த மாநில மொழி பாட ஆசிரியர்கள் காலி எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, தமிழகம் மட்டுமில்லாமல் பிற மாநிலங்களில் தமிழ் பாடம் அமல்படுத்தப்பட்டுள்ள பள்ளிகளில் உள்ள தமிழ் மொழிப்பாட ஆசிரியர் பணியிடங்களை பொறுத்தவரை.
ஆந்தமான் நிகோபார்: 156
ஆந்திரா: 1268
சட்டீஸ்கர்: 22
டில்லி: 25
கோவா: 22
குஜராத்: 24
கர்நாடகா: 442
கேரளா- 1271
மகாராஷ்டிரா: 245
ஒடீஷா: 13
புதுச்சேரி: 5976
தமிழ்நாடு: 5,69,920
தெலங்கானா: 511
தமிழகத்திலேயே 5 லட்சத்து 69 ஆயிரம் மொழிப்பாட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.