1000 கோடி வசூல் செய்த 5 திரைப்படங்கள்!!! அங்கம் வகித்த பிரபல நடிகைகள்!!!

0
31
#image_title

1000 கோடி வசூல் செய்த 5 திரைப்படங்கள்!!! அங்கம் வகித்த பிரபல நடிகைகள்!!!

இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி 1000 கோடி ரூபாய் வசூல் செய்த திரைப்படங்கள் பற்றியும் அதில் நடித்த நடிகைகள் யார் என்பது பற்றியும் இந்த பதிவில் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

இந்திய சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாகி வருகின்றது. பெரிய திரைப்படங்களும் சிறிய திரைப்படங்களும் வருகின்றது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மக்களிடம் அதிகம் வரவேற்பு பெற்று இந்திய அளவில் உலக அளவில் பேசப்படும் திரைப்படங்களும் இருக்கின்றது. அதே போல பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மண்ணை கவ்வும் திரைப்படங்களும் இருக்கின்றன.

அந்த வகையில் பெரிய பட்ஜெட்டில் பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர், பதான், ஜவான் ஆகிய திரைப்படங்கள் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. அதே போல குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தங்கல் திரைப்படமும் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகைகள் யார் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன்…

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி 2 திரைப்படம் 250 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. இதையடுத்து இந்த திரைப்படம் உலக அளவல் 1810 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகைகள் தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து 1000 கோடி ரூபாய் வசூலித்த திரைப்படத்தில் அங்கமாக இருந்துள்ளார்.

நயன்தாரா, தீபிகா படுகோன், பிரியாமணி, சான்யா மல்ஹோத்ரா…

இயக்குநர் அட்லி இயக்கத்தில் 300 கோடி ரூபாய் செலவில் ஜவான் திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக உலக அளவில் கிட்டதட்ட 1080 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகைகள் நயன்தாரா, தீபிகா படுகோன், பிரியாமணி, சான்யா மல்ஹோத்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாத்திமா சனா சாய்க், சான்யா மல்ஹோத்ரா…

இயக்குநர் நிதேஷ் திவாரி அவர்களின் இயக்கத்தில் 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தங்கல் திரைப்படம் உலக அளவில் 2024 கோடி ரூபாய் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தில் பாத்திமா சனா சாய்க், சான்யா மல்ஹோத்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆலியா பட்…

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் 550 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு வெளியான ஆர.ஆர்.ஆர் திரைப்படம் உலக அளவில் 1316 கோடி ரூபாய் வசூல் செய்து பெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் நடிகை ஆலியா பட் அவர்கள் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

தீபிகா படுகோன், டிம்பிள் கபாடியா…

இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 225 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு வெளியான பதான் திரைப்படம் உலக அளவில் 1050 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தில் நடிகைகள் தீபிகா படுகோன், டிம்பிள் கபாடியா ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.