மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் வெறும் கண் துடைப்பு!!! திமுக எம்.பி கனிமொழி அவர்கள் பேட்டி!!!

0
34
#image_title

மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் வெறும் கண் துடைப்பு!!! திமுக எம்.பி கனிமொழி அவர்கள் பேட்டி!!!

தற்பொழுது சட்டமாக மாற்றப்பட்டுள்ள பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவானது வெறும் கண் துடைப்பு மட்டும் தான் என்று திமுக கட்சியின் எம்.பி கனிமொழி அவர்கள் பேட்டி அளித்து உள்ளார்.

மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கான 33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யும் மசோதா சில வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பாஜக அரசால் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த ஒப்புதலுடன் தாக்கல் செய்யப்பட்டு குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் கையெழுத்து இடப்பட்டு மசோதாவானது சட்டமாக்கப்பட்டது.

இதையடுத்து மசோதாவானது சட்டமாக்கப்பட்டது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக எம்.பி கனிமொழி அவர்கள் பெண்களுக்கான இட ஒதுக்கீடு செய்யும் சட்டம் பாஜக அரசின் வெறும் கண் துடைப்பு என்று பேட்டி அளித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக எம்.பி கனிமொழி அவர்கள் “அக்டோபர் 14ம் தேதி நாங்கள் மகளிர் உரிமை மாநாட்டை நடத்த இருக்கின்றோம். இந்த மகளிர் உரிமை மாநாட்டில் எதிர்கட்சிகளின் கூட்டணி அமைப்பான இண்டியா கூட்டணியை சேர்ந்த கட்சிகளின் பெண் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த மகளிர் உரிமை மாநாட்டில் பெண்களுக்கான 33 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டம் பற்றி விரிவாக பேசவுள்ளோம். தற்பொழுது இருக்கும் பெண்களின் நிலை என்ன என்பது குறித்து இந்த மகளிர் உரிமை மாநாட்டில் பெண் தலைவர்கள் பேசவுள்ளனர்.

பாஜக அரசு கொண்டு வந்துள்ள மகளிருக்கான 33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யும் சட்டம் வெறும் கண் துடைப்பு தான். பெண்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை ஆகியவற்றை வைத்து பார்க்கும் பொழுது இன்னும் 25 ஆண்டுகள் ஆனாலும் அமல்படுத்த முடியாது என்பது தெளிவாக தெரிகின்றது” என்று அவர் பேட்டி அளித்துள்ளார்.