கல்லூரி மாணவியின் கொலை வழக்கை விசாரித்த போது போலீசாருக்கு அதிர்ச்சி தரும் தகவலாக சீரியல் கில்லர் செய்த கொலை பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 14-ஆம் தேதி கல்லூரி மாணவி ஒருவர் தோழியுடன் மொபைல் போனில் பேசியபடி தனியாக நடந்து சென்ற போது படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வல்சாத் நகர போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் 2000 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து சந்தேகத்திற்கு உரிய வகையில் பதில் அளித்த ஒருவனை கைது செய்தனர். அவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளது. மாற்றுத்திறனாளியான அவன் இதுவரை கர்நாடகா, மேற்கு வங்காளம், தெலுங்கானா, மற்றும் மராட்டியும் மாநிலங்களில் பலரை கொலை செய்து பணம், நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துள்ளான்.
அரியானாவின் ரோத்தக் மாவட்டத்தை சேர்ந்தவன் ராகுல். இவன் ஒரு மாற்றுத்திறனாளி. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அவன் போலூ, கரம்வீர், ஈஸ்வர் ஜாட் போன்ற பெயர்களில் ரயில்களில் அடிக்கடி பயணம் மேற்கொண்டுள்ளான். இவன் கடந்த காலங்களில் ராஜஸ்தான், அரியானா, உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் லாரி திருட்டு, சட்டவிரோத ஆயுத கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டதால் 2018 & 2024 ஆண்டுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
இந்த நிலையில் தான் கடந்த 14-ஆம் தேதி குஜராத் மாநிலத்தின் மோதிவாடா கிராமத்தில் செல்போனில் தோழியுடன் பேசியபடி 19- வயது கல்லூரி மாணவி சென்றுள்ளார். அவர் வீட்டிற்கு திரும்புவதற்காக ரயில்வே தண்டவாளம் அருகில் தனியாகச் சென்று கொண்டிருந்தபோது, முன்பு வேலை பார்த்த ஓட்டலில் சம்பள பாக்கி வாங்க சென்ற ராகுல் உத்துவாடா பகுதியில் இறங்கி தனியாக சென்ற மாணவியை பார்த்துள்ளார். பின்னர் அவர் மாணவியை பின்தொடர்ந்து சென்று தாக்கி அருகே உள்ள மாஞ்சோலைக்கு இழுத்துச் சென்று பாலில் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த பகுதியில் இருந்து மாணவியின் பை மற்றும் ஆடைகளை போலீசார் கைப்பற்றினர்.
இந்த சம்பவம் குறித்து வல்சாத் போலீஸ் சூப்பிரண்ட் கரண்ராஜ் வகேலா கூறுகையில் குற்றவாளி அடிக்கடி ரயில் பயணம் செய்வதும், ரயில் நடைமேடைகளில் படுத்து உறங்கும் வழக்கத்தையும் வைத்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் குற்ற சம்பவங்களிலிருந்து தப்பிக்க புலம்பெயர்ந்து ஊர்விட்டு ஊர் மாறி இருக்கிறார்.
அவரின் கடந்த கால குற்ற செயல்கள்;
1. சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் பூனே-கன்னியாகுமரி ரயிலில் மாற்றுத்திறனாளி பெட்டியில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்து படுகொலை செய்துள்ளான். அவரிடம் இருந்த பணம், நகை முதலியவற்றை கொள்ளை அடித்து அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி தப்பியுள்ளார்.
2. அதேபோல கடந்த 19-ஆம்தேதி கத்திஹார் எக்ஸ்பிரஸில் 60 வயது முதியவரை கத்தியால் குத்தி கொலை செய்து அவரிடம் உள்ள பணம் உடைமைகளை கொள்ளையடித்துள்ளான். கடந்த 14-ஆம்தேதி மங்களூரு சிறப்பு எக்ஸ்பிரஸில் பயணித்த பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு பணம்,செல்போன் கொள்ளை அடித்துச் சென்றுள்ளான்.
3. அக்டோபர் 25-ஆம்தேதி பெங்களூர்-முருதேஸ்வர் ரயிலில் சகபயணி ஒருவரை கொலைசெய்து பணம், நகை கொள்ளையடித்துள்ளான்.
போலீசாரின் கைது நடவடிக்கைக்கு முன்தினம் கூட தெலுங்கானா மாநிலத்தில் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் தனியாக இருந்த பெண் ஒருவரிடம் பணம்,நகை கொள்ளையடித்து விட்டு அவரை கொலை செய்துள்ளான்.
இவன் மாற்றுத்திறனாளியாக இருப்பதால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ரெயிலில் அடிக்கடி பயணம் செய்து தனியாக இருக்கும் பயணிகளிடம் கொள்ளையடித்ததோடு மட்டுமில்லாமல் கொலைகளையும் செய்துள்ளான். பெண்களாக இருந்தால் அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். யாரிடமும் சிக்காமல் இருந்த அவன் கல்லூரிமாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இந்த பின்னணி சம்பவங்கள் வெளிவந்துள்ளன.
இவன் கடந்த அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை உள்ள 35 நாட்களில் 5 கொலைகளை செய்துள்ளான். இவன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்து சுற்றியபடியே 5 மாநிலங்களில் 5 கொலைகளை பணம், நகை போன்றவற்றிற்காக செய்துள்ளான்.
மேலும் அவன் ஏதேனும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளானா? என போலீசார் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர். மாற்றுத்திறனாளி ஒருவன் தனியாக செய்த இந்த சம்பவத்தால் போலீசார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.