இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் ஒரு போட்டியில் வென்று ஒரு போட்டியில் சமன் செய்துள்ளது. ஆஸ்திரேலியா அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி நான்காவது போட்டிக்கான தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இதில் மொத்தமாக 5 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதில் முதலில் சுப்மன் கில் முதல் போட்டியின் பயிற்சியில் ஈடுபடும் போது கட்டை விரலில் காயம் ஏற்பட்டு விளையாடவில்லை. அதன் பின் இரு போட்டிகளில் விளையாடினார். தற்போது மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மீண்டும் காயம் ஏற்பட்டது. பின் சிகிச்சை பெற்று பயிற்சி மேற்கொண்டார்.
அடுத்த படியாக ரோஹித் ஷர்மாவுக்கு காலில் காயம் ஏற்பட்டு அப்படியே அமர்ந்தார். மேலும் பிசியோ வந்த பின் சற்று ஓய்வு பெற்று மீண்டும் பயிற்சியைத் தொடங்கினார். அடுத்த படியாக ஆகாஷ் தீப் அவருக்கு பேட்டிங் பயிற்சி செய்யும் போது காயம் ஏற்பட்டது. அடுத்ததாக கே எல் ராகுல் தற்போது அணியில் சிறப்பாக விளையாடி வரும் வீரர் கே எல் ராகுல் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. அவர் நிலை என்ன என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. அடுத்த படியாக ஜெய்ஸ்வால் இவருக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது. தற்போது சிகிச்சை பெற்று பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.