இடுப்பு மூட்டு வலிக்கு பாய் பாய் சொல்லும் 5 பொருட்கள்!! மிஸ் பண்ணாதீங்க ரொம்ப வருத்தப்படுவீங்க!!
30 வயது கடந்து விட்டாலே பெரும்பாலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மூட்டு வலி இடுப்பு வலி ஏற்பட்டு விடுகிறது. கால்சியம் சத்து குறைபாட்டாலும் மூட்டு வலி உண்டாகும்.
இதனை தவிர்க்க நாம் ஆரம்பகட்ட காலத்தில் இருந்தே நமது உணவில் சிறிதளவு மாற்றத்தை ஏற்படுத்தினால் போதும், மூட்டுவலி பிரச்சனையிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
முதலாவதாக நாம் உணவில் தினம் தோறும் சிறிதளவு தயிரை சேர்த்துக் கொள்வதால் உடலில் உள்ள எலும்புகள் வலுவடைந்து நல்ல ஆரோக்கியமாக இருக்கக்கூடும்.
அதேபோல நாம் இன்னும் உணவில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரை அல்லது வெல்லத்தை பயன்படுத்துவதால் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உடலுக்கு அதிக அளவு கிடைத்து எலும்புகள் வலுப்பெறும்.
அதேபோல தினமும் காலை நேரத்தில் இரண்டு அல்லது மூன்று துளசி இலைகளை சாப்பிட்டு வருவதால் அதில் உள்ள ஸ்பாஸ்மோட்டிக் கீழ்வாத ஏற்படாமல் நம்மை பாதுகாக்கும். துளசியை டீயாகவும் வைத்து பருகலாம்.
மேலும் வெந்தயத்தை பொடி ஆக்கி அரைத்து வைத்துக்கொண்டு அதனை காலை மாலை என இருவேளை நீரில் கலந்து சாப்பிட்டு வர எலும்புகள் வலுப்பெற்று மூட்டு வலியில் இருந்து விடுபடலாம்.