கூடுதல் வருமானம் ஈட்ட 5 எளிய வழிமுறைகள்!! மாதம் ரூ20,000 சம்பாதிக்க வாய்ப்பு!!

0
13

தற்பொழுது உள்ள விலைவாசியில் வீட்டில் ஒருவருடைய சம்பளம் போதவில்லை என தொடங்கி ஒருவருடைய ஒரு சம்பளம் பத்தவில்லை என்ற அளவிற்கு விலைவாசி உயர்ந்திருக்கிறது. இதனால் பலரும் தாங்கள் பார்க்கக்கூடிய வேலையோடு சேர்த்து கூடுதல் வருமானம் ஏற்றுவதற்கான வழிகளை தேடி வருகின்றனர். அவ்வாறு தேடக்கூடிய அவர்களுக்கு 5 நிலையான கூடுதல் வருமானங்களை பெற்றுக் கொடுக்கக்கூடிய வழிமுறைகளை இந்த பதிவில் காணலாம்

 

✓ டிஜிட்டல் வேலைவாய்ப்பு :-

 

கிராபிக்ஸ் வடிவமைப்பு விலை மேம்பாடு டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்ற திறன்களை கொண்டவராக இருந்தால் அவர்களுக்கு Fiverr, Upwork போன்ற தளங்களில் வேலைகளை பெற முடியும். இதில் மாதத்திற்கு 10 முதல் 12 மணி நேரம் வேலை செய்வதன் மூலமாக 15,000 முதல் 25 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும்.

 

✓ ஆன்லைன் பயிற்சி :-

 

நீங்கள் கணிதம் அறிவியல் அல்லது ஆங்கிலம் போன்ற ஏதேனும் ஒரு தனி பாட பிரிவில் சிறந்து விளங்குபவராக இருந்தால் ஆன்லைன் பயிற்சி மூலமாக Vedantu, Unacademy போன்ற வலைதளங்களை பயன்படுத்தி கூடுதல் வருமானம் என்ற முறையும். இதில் உங்களுடைய வார இறுதி நாட்களில் 1 முதல் 2 மணி நேரம் வரை வகுப்புகள் எடுப்பதன் மூலம் வருமானத்தை ஈட்டலாம்.

 

✓ விளம்பரப்படுத்துவதன் மூலம் வருமானம் :-

 

அமேசான் மற்றும் பிலிப்கார்ட் போன்ற பெரிய தலங்களின் துணை நிறுவனங்களாக சேர்ந்து அவர்களின் உடைய பொருட்களை விளம்பரப்படுத்துவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். இதனை நீங்கள் instagram youtube வலை பதிவு மூலம் விளம்பரப்படுத்தினால் கமிஷன் பெறலாம்.

 

✓ பொருட்கள் இல்லாமல் வணிகம் :-

 

எந்த ஒரு பொருளையும் வாங்கவோ சேமிக்கவோ தேவையில்லாமல் ஆன்லைனில் ஆர்டர்களை பெறுவதன் மூலம் அதனை மூன்றாம் தரப்பினருக்கு டெலிவரி செய்து , குறிப்பாக Shopify, WooCommerce போன்ற மூன்றாம் தரப்பு தளங்களை தொடங்குவதன் மூலம் கூடுதல் வருமானத்தை ஈட்ட முடியும்.

 

✓ பகுதிநேர கடைகளின் மூலம் வருமானம் :-

 

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க விருப்பம் இல்லாதவர்கள் வார இறுதி நாட்களில் சந்தைகளில் அல்லது உள்ளூர் கண்காட்சிகளில் கடையமைத்து வீட்டில் தயாரிக்க கூடிய பொருட்கள் சிற்றுண்டிகள் போன்றவற்றை விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் ஈட்ட முடியும். மேலும் உங்களுடைய பொருட்களை விளம்பரப்படுத்த சந்தைப்படுத்துதல் நல்ல நோக்கமாக அமையும்.

Previous articleசமூக வலைத்தளம் மற்றும் ஓடிடியில் ஆபாச காட்சிகள்!! உச்ச நீதிமன்றம் காட்டிய அதிரடி!!
Next articleஇதுபோல் ஒரு சம்பவம் நடக்கக் கூடாது!… பஹல்காம் தாக்குதல் பற்றி பேசிய அஜித்!..