சிக்கனமாக செலவு செய்து லட்ச கணக்கில் சேமிக்க 5 முத்தான வழிகள் உங்களுக்காக!!

Photo of author

By Divya

சிக்கனமாக செலவு செய்து லட்ச கணக்கில் சேமிக்க 5 முத்தான வழிகள் உங்களுக்காக!!

நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அதை திட்டமிட்டு சேமிக்கவும்,செலவழிக்கவும் வேண்டும்.இல்லையென்றால் மாத இறுதியில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு கடனில் சிக்கும் நிலை ஏற்பட்டு விடும்.

டிப் 01:-

கடையில் ஏதேனும் பொருள் வாங்க வேண்டும் என்றால் முழு தொகை கொண்டு செல்லாமல் சிறு தொகையை சேமிப்பாக எடுத்து வைத்து விட்டு மீதமுள்ள பணத்தை செலவு செய்யவும்.இவ்வாறு செய்வதினால் பணம் மிச்சம் ஆகும்.

டிப் 02:-

சில விஷயங்களில் கஞ்ச தனமாக இருப்பது மிகவும் முக்கியம் ஆகும்.

நம் கண்களை கவரும் பொருட்கள்,நமக்கு பயன்படாத பொருட்கள் ஆகியவற்றை வாங்கக் கூடாது என்று மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.இதனால் பணம் தேவையில்லாமல் செலவாவது தடுக்கப்படும்.

டிப் 03:-

உங்களுக்கு ஒரு பொருள் வாங்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அதை உடனே வாங்கக் கூடாது.இந்த பொருள் எங்கு விலை மலிவாக கிடைக்கும் என்று அலசி ஆராய்ந்து வாங்க வேண்டும்.இவ்வாறு செய்வதினால் அதிகளவு பணம் மிச்சம் ஆகும்.

டிப் 04:-

எந்த ஒரு செலவை செய்வதற்கு முன்னரும் தீர யோசித்து செய்ய வேண்டும்.அந்த செலவை செய்வதினால் நமக்கு பலன் கிடைக்குமா என்று யோசித்து செலவு செய்ய வேண்டும்.

டிப் 05:-

அதிக செலவு செய்வதை தவிர்த்து பணத்தை எவ்வாறு சேமிக்கலாம்.இந்த பணத்தை எவ்வாறு இரு மடங்கு ஆக்குவது என்று சிந்திக்க வேண்டும்.சில செலவுகளை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும்.அப்பொழுது இதற்கு செலவில்லாத மாற்று வழி உள்ளதா என்பதை யோசிக்க வேண்டும்.