திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்:! சென்னை அருகே பரபரப்பு!!

Photo of author

By Pavithra

திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்:! சென்னை அருகே பரபரப்பு!!

Pavithra

திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்:! சென்னை அருகே பரபரப்பு!!

சென்னை ராயப்பேட்டை புதுக் கல்லூரி அருகே பழமையான ஒரு 5 மாடி கட்டிடம் இருந்தது வருகிறது.இந்த கட்டிடம் தொடர்பான வழக்கு ஏற்கனவே நிலுவையில் இருந்து வந்த நிலையில் இந்த கட்டிடத்தில் யாரும் குடியிருக்கவில்லை.இந்த கட்டிடத்தில் வாட்ச்மேன் ஒருவர் மட்டுமே இருந்து வருகின்றார்.

இந்நிலையில் நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் அந்த ஐந்து மாடிக்கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.கட்டிடம் இடிந்து விழுந்த சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.இதைத்தொடர்ந்து தீயணைப்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க,தகவலின் பேரில் தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கட்டிடம் இடிந்து விழுந்த பொழுது கட்டிடத்தின் உள்ளே மற்றும் கட்டிடத்தின் அருகில் யாரும் இல்லாததால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
ஆனால் கட்டிடத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு சரக்கு வாகனம் மற்றும் சற்று சேதம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் இதுகுறித்து ராயப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.