5 தேசிய விருது வென்ற சிவாஜி படத்தை கலாய்த்து தள்ளிய நடிகர் – அவர் யார்ன்னு தெரியுமா?

0
42
#image_title

5 தேசிய விருது வென்ற சிவாஜி படத்தை கலாய்த்து தள்ளிய நடிகர் – அவர் யார்ன்னு தெரியுமா?

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம் வகுத்து கொடுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் தமிழ் மட்டுமல்ல பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் சின்ன வயதிலிருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்டவராக இந்த சிவாஜி முதலில் மேடை நாடகங்களில் நடித்தார்.

இதனையடுத்து, தமிழில் முதன்முதலாக தமிழில் ‘பராசக்தி’ என்ற படம் மூலம் அறிமுகமானார். இதன் பின்பு தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். உணர்ச்சிப் பூர்வமாக நடிப்பதிலும், தமிழ் உச்சரிப்பதிலும், நல்ல குரல்வளமும், சிறந்த நடிப்புத் திறனும் கொண்டிருந்ததால, இவரை ‘நடிகர் திலகம்’ என்றும், ‘நடிப்புச் சக்கரவர்த்தி’ என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

சிவாஜி அனைத்து கலைஞர்களுடன் அன்பாக பழகக்கூடியவர். இவரின் ஹிட்டடித்த படத்தை ஒரு பிரபலம் கலாய்த்தாராம்.

நடிகர் சிவாஜி, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் தேவர் மகன். இப்படத்தில் சிவாஜியை நடிக்க கேட்டபோது, அந்த சமயத்தில் சிவாஜிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாராம். அதனால், கமலும் சிவாஜி உடல் நலம் தேறி வரும்வரை காத்துக்கொண்டிருந்தாராம். உடல் நலம் சரியான பின்புதான் சிவாஜி ‘தேவர் மகன்’ படத்தில் நடித்து கொடுத்துள்ளார். இப்படம் 5 விருதுகளை வென்றது. ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

 

இந்தப் படத்தை தன் உறவினர்களுக்கு சிவாஜி போட்டு காண்பித்துள்ளார். அனைவரும் இப்படத்தைப் பார்த்து புகழ்ந்து தள்ளிவிட்டனராம். ஆனால், ஒரே ஒரு நடிகர் மட்டும்தான் இப்படத்தைப் பார்த்து சத்தம் இல்லாமல் நழுவினாராம். அவர் வேறு யாரும் இல்லை கவுண்டமணிதான்.

உடனே இதைப் பார்த்த சிவாஜி, கவுண்டமணியை வீட்டிற்கு வரவழைத்து பேசியுள்ளார். எல்லாரும் படத்தைப் பார்த்து நல்லாயிருக்குன்னு சொல்றாங்க.. நீ மட்டும் நைசா நழுவி போய்ட்ட…. என்ன படம் எப்படி இருக்கு என்று கேட்டாராம்.

அதற்கு கவுண்டமணி, சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. நீங்க ஊருலையே பெரிய ஆளு. ஒரே உங்கள கண்டா மரியாதை பயந்து நடுங்குறாங்க. ஆனா ஒரு சின்ன பிள்ளை மிதிச்சா நீங்க செத்து போவீங்க என்று கிண்டலாக கூறினாராம். இதைக் கேட்டதும் சிவாஜி நக்கென சிரித்தேவிட்டாராம்.

author avatar
Gayathri