மருத்துவ காப்பீடு என்பது எதிர்பாராத மற்றும் திடீரென ஏற்படக்கூடிய உடல் நலக் குறைவு விபத்து போன்றவற்றிற்கான காப்பீட்டுத் தொகையை உறுதி செய்யக்கூடிய விஷயமாகும். பொதுவாக மருத்துவ காப்பீடு என்பது எடுக்கும் பொழுது சில முக்கிய விஷயங்களை கவனித்தல் மிக மிக அவசியம். புதிதாக மருத்துவ காப்பீடு எடுக்கக் கூடியவர்கள் கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
✓ மகப்பேறு காப்பீடு :-
இந்த காப்பீடு ஆனது குழந்தை கருவுற்றது முதலே பயன்படுத்தும் வகையிலும் அல்லது குழந்தை பிறந்த பெண் குழந்தைக்கான செலவுகள் மகப்பேறு பிரசவத்திற்கான செலவுகள் என அனைத்தையும் உள்ளடக்கியது. இது காப்பீட்டு நிறுவனங்களை பொறுத்து 9 மாதங்கள் முதல் 6 ஆண்டுகள் வரை காத்திருப்பு காலத்தை உறுதி செய்கிறது.
✓ விபத்து காப்பீடு :-
திடீரென ஏற்படக்கூடிய தீராத வியாதி அல்லது விபத்துகளுக்கு இதன் மூலம் செலவுகளை சமாளிக்க முடியும். அதிலும் குறிப்பாக, இதய நோய், சிறுநீரக செயலிழப்பு அல்லது புற்றுநோய் போன்ற தீராத நோய்களுக்கு 90 நாட்கள் காத்திருப்பு காலமாக வழங்கப்படும். ஆனால் இந்த காப்பீட்டுத் தொகையானது ஒருமுறை பெறப்பட்டு விட்டால் அது அன்றோடு முடிந்துவிடும். இதன்பின் மீண்டும் பயன்பட வேண்டும் என நினைத்தால் அதற்காக புதிய காப்பீட்டை பெறுதல் வேண்டும்.
✓ மருத்துவமனை ரொக்க காப்பீடு :-
இந்த காப்பி டைப் பொறுத்தவரையில் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட கூடியவர் 24 மணி நேரத்திற்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் நேரடியாக மருத்துவமனைக்கு கொடுக்கக்கூடிய பணத்தை ரொக்கமாக இந்த காப்பீட்டில் பெறலாம். இவ்வாறு பெறுவதன் மூலம் பயணம் உணவு போன்ற மருத்துவமனையின் பிற செலவுகளுக்கும் இந்த காப்பீடு கைகொடுக்கும்.
✓ ரூம் வாடகையில் விலக்கு :-
மருத்துவ காப்பீட்டில் இந்த ரைட்டரை தேர்வு செய்யக்கூடியவர்களுக்கு மருத்துவமனையின் ரூம் செலவு குறித்த எந்தவித கவலையும் இன்றி உடல் நலமில்லாமல் இருக்கக்கூடியவர்களுக்கு எந்த அறை வசதியாக இருக்குமோ அந்த அறையை தேர்வு செய்து கொள்ளலாம். எத்தனை நாட்கள் தங்குகிறோம் என்பது குறித்து எந்த வித கவலையும் இன்றி தங்களுடைய சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு இந்த ரைட்டர் உதவியாக உள்ளது.
✓ வெளி நோயாளிகள் பிரிவு :-
வீட்டில் குழந்தைகளை வைத்திருக்கக் கூடியவர்களுக்கு ஓபிடி ரைட்டர் தேர்வு செய்வதன் மூலம் அடிக்கடி நிகழக்கூடிய வெளி நோயாளி பிரிவுகளை அதாவது அடிக்கடி வீட்டில் ஏற்படக்கூடிய உடல் நலக்குறைவுகளுக்கு கையில் இருந்து எந்த ஒரு பணத்தையும் செலவு செய்யாமல் காப்பீட்டின் மூலமே மருத்துவர் வருகை, நோயறிதல் சோதனைகள், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் போன்றவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.
இதுபோன்ற ரைட்டர்களை சரியாக தேர்வு செய்தல் மூலம் உங்களுடைய மருத்துவ காப்பீடு ஆனது சிறப்பானதாகவும் அவசர நேரங்களில் உங்களுக்கு கை கொடுப்பதாகவும் அமையும்.