என்ன தான் காலம் மாறிவிட்டாலும், நாகரிகம் ஆகி முன்னேறிவிட்டாலும் இன்னும் ஒரு சில விஷயங்கள் வெளிப்படையாக பேசுவது என்பது ஒரு பெரிய குற்றமாகவே உள்ளது.
அதில் மிக முக்கியமான டாபிக் ‘செக்ஸ்’ இதை ஆண்கள் கூட எளிதில் பேசி விடலாம், ஆனால் பெண்கள் பேசிடவே முடியாது.
ஆண்கள் தங்கள் ஆசைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல் பெண்ணின் உணர்வையும் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி புரிந்து கொண்டால் எந்த பெண்ணையும் திருப்தி படுத்தி விடலாம்.
1.பெண்களின் உணர்வை மதியுங்கள்:
செக்ஸில் உங்களின் உணர்வை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், பெண்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அவர்களிடம் எந்த தயக்கமும் இன்றி கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். பெண்கள் விருப்பத்துடன் உறவில் ஈடுபட ஆர்வப்படுத்துங்கள். அவர்களுக்கு எது புடிக்கும் எனக்கேட்டு அதன் படி நடந்து கொள்ளுங்கள். இருவரும் இன்பம் அடைவதே ஆரோக்கியமான உறவு.
2.அனைத்து உச்ச நிலைகளையும் முயற்சி செய்யுங்கள்:
பெரும்பாலும், ஆண்கள் தங்கள் உச்சகட்டத்தை கிளிட்டரல் புணர்ச்சியுடன் தொடர்புபடுத்துகிறார்கள். மற்றும் பெண்களுக்கு அத்தகைய புணர்ச்சியை வழங்க முடியாவிட்டால் தங்களை போதுமான திறமையற்றவர்கள் என்று நினைக்கிறார்கள். ஒரு பெண் உடலில் முப்பதுக்கும் மேற்பட்ட ஈரோஜெனஸ் மண்டலங்கள் உள்ளன மற்றும் 11 க்கும் மேற்பட்ட வகையான உச்சக்கட்டம் இருக்கிறது . எனவே, கிளிட்டரல் உச்சக்கட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தாதீர்கள். அதற்கு பதிலாக, மற்ற அனைத்து வகையான உச்சகட்டத்தையும் முயற்சி செய்யுங்கள்.
3.பெண்களே கையாளட்டும்:
சில நேரங்களில் உறவின் போக்கை பெண்களிடம் கையாள விட்டு விட்டு நீங்கள் ஏதும் செய்யாமல் அந்த இன்பத்தை மட்டும் உணருங்கள். இது பல பெண்களுக்கு தன்னம்பிக்கையும், அதிகார உணர்வையும் கொடுக்கும். இந்த நேரங்களில் பெண்கள் மிகவும் கவர்ச்சியாகவும் தெரிவது உண்டு.
4.ஓய்வு நிலையில் உறவு:
வீட்டு வேலை, அலுவலக வேலை, குழந்தைகள் பராமரிப்பு பெண்கள் நாள்தோறும் வேலை செய்து ஓய்வாக இருப்பார்கள். அந்த நேரங்களில் அவர்களை வற்புறுத்தமால் உறவில் ஈடுபடுங்கள். பெண்கள் ஓய்வு நிலையிலே இருந்து உறவு கொள்ளும் செக்ஸ் பொசிஷன்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.
5.மந்த உணர்வு:
உங்கள் பார்ட்னர் செக்சில் மந்தமான உணர்வோடு இருந்தால், அவரிடம் சண்டை போடாமல், திட்டாமல், வசை பாடாமல் அதற்கான காரணத்தை கண்டறியுங்கள், அவரிடம் மனம் விட்டு பேசுங்கள். இது உங்கள் உறவை மீண்டும் பிறப்பிக்க உதவும்.