5 முதல் 11 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி!
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றானது மிக குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கும் அதி வேகமாக பரவி உலகையே தன் பிடியில் கட்டிப்போட்டது. மிகப்பெரிய வளர்ந்த நாடுகள் கூட இதன் பிடியில் இருந்து தப்ப முடியாமல் தவித்தன.
இதனால் உலக நாடுகள் அனைத்தும் இந்த கொரோனா தொற்று பரவலின் அதிவேக வளர்ச்சியைக் கண்டு அதிர்ந்து போயின. ஆகவே இந்த கொரோனாவின் கோரப் பிடியில் இருந்து மக்கள் அனைவரும் தங்களை தற்காத்துக் கொள்ளவதற்காக உலக நாடுகள் அனைத்தும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தின.
அதன்படி மக்கள் அனைவரும் ஒவ்வொருவராக தாங்களாக முன்வந்து தற்போது தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரேசில் அரசு 5 முதல் 11 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்துள்ளது.
கொரோனாவின் உருமாறிய ஒமைக்ரான் மாறுபாட்டின் வருகையால் பிரேசிலில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பிரேசில் அரசு 5 முதல் 11 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்துள்ளது.
பைசர்-பயோ என்டெக் என்னும் தடுப்பூசி 5 முதல் 11 வயதுடையவர்களுக்கு பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என பிரேசில் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட விரும்பும் பெற்றோர்கள் சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என கேட்டுக்கொண்டுள்ளது.