வாயுத் தொல்லை,செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல்,வயிறு உப்பசம் உள்ளிட்ட வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளில் இருந்து மீள மூலிகை தேநீர் செய்து பருகவும்.
1)பெருஞ்சீரகத் தேநீர்
*தேன் – ஒரு ஸ்பூன்
*பெருஞ்சீரகம்(சோம்பு) – ஒரு ஸ்பூன்
ஒரு கிளாஸ் அளவு தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகம் சேர்த்து கொதிக்க விடவும்.
இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் கலந்து குடித்தால் வாயுத் தொல்லை,வயிறு உப்பசம் போன்ற வயிறு உபாதைகள் குணமாகும்.
2)எலுமிச்சை தேநீர்
*தேன் – ஒரு ஸ்பூன்
*எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒன்று முதல் இரண்டு நிமிடங்களுக்கு சூடாக்கிக் கொள்ளவும்.
பிறகு இதை ஒரு கிளாஸில் ஊற்றி ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் மலக் குடலில் தேங்கியுள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும்.
3)கருப்பு மிளகு இஞ்சி தேநீர்
*தேன் – ஒரு ஸ்பூன்
*மிளகு – 1/4 ஸ்பூன்
*இஞ்சி – ஒரு துண்டு
முதலில் 1/4 ஸ்பூன் மிளகை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.பிறகு ஒரு துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இந்த இரண்டு பொருளையும் பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் கலந்து குடித்தால் செரிமானக் கோளாறு,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகள் குணமாகும்.
4)ஓமம் தேநீர்
*தேன் – ஒரு ஸ்பூன்
*ஓமம் – 1/2 ஸ்பூன்
பாத்திரம் ஒன்றில் 100 மில்லி தண்ணீர் ஊற்றி 1/2 தேக்கரண்டி ஓமம் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
இரண்டு நிமிடங்களுக்கு பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் மலச்சிக்கல்,வாயுத் தொல்லை,செரிமானப் பிரச்சனை அனைத்தும் குணமாகும்.
5)கிராம்பு தேநீர்
*பட்டை – ஒரு துண்டு
*கிராம்பு – நான்கு
*தேன் – ஒரு ஸ்பூன்
அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு அதில் நான்கு கிராம்பு மற்றும் ஒரு துண்டு பட்டை சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைக்கவும்.
இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் கலந்து குடித்தால் வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து பாதிப்புகளும்’குணமாகும்.