உடலுக்கு பயனுள்ள 5 மூலிகை இலைகள்!! இயற்கை மருத்துவ குறிப்புகள்!!

Photo of author

By CineDesk

உடலுக்கு பயனுள்ள 5 மூலிகை இலைகள்!! இயற்கை மருத்துவ குறிப்புகள்!!

அல்லி இதழ்

200 கிராம் உலர்ந்த வெள்ளை அல்லி இதழ்களை எடுத்து 6 லிட்டர் நீரில் ஊறவைத்து, வடித்து 30 மி.லி. நீரை காலை மாலை குடித்து வர சிறுநீரில் இரத்தம்,  சிறுநீர் மிகுதியாகக் கழிதல்,சிறுநீர்ப்பாதைப்புண், தாகம், உட்காய்ச்சல் ஆகியவை குணமடயும்.

ஆடாதோடை

உடல் சோர்வு, தசை பிடிப்பு, முழங்கால் வலி போன்றவை நீங்க ஆடாதோடை இலையைப் பறித்து கசாயமாக்கி குடித்தால் விரைவில் குணமடயும். மேலும் ஆடாதோடை நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றி நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள உதவும்.

செம்பருத்திப் பூ

மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உடல் உபாதைகளைக் குறைக்கும். செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தல்லம் உடலுக்கு மிக நல்லது. மேலும்,  மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, தலைவலி, மயக்கம் போன்றவை குணமாகும்.

துத்திக் கீரை

துத்திக் கீரையை நன்கு நீரில் கழுவி சிறிது சிறியதாக நறுக்கி நீரில் கொதிக்க வைக்க வேண்டும். பின்பு நன்கு கொதித்த பின் அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து ரசமாக அருந்தினால் உடலில் உள்ள சூடு தணியும்.

செந்நாயுருவி இலை

செந்நாயுருவிச் செடி இலையைப் பருப்புடன் சேர்த்து சமைக்கலாம். இதை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் உள்ள சளி, இருமல் குணமாகும். விட்டு விட்டு வரும் காய்சலுக்கு நாயுருவி இலைகளுடன் மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து மாத்திரைகளாக உருட்டி, கொடுத்தால் விரைவில் குணமாகும்.