பொதுவாக காதலில் இணைந்து இல்லற வாழ்க்கையை நடத்தும் பொழுது கணவன் மற்றும் மனைவிக்கு இடையே மோதல்கள் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய வரமாகவே பார்க்கப்படுகிறது. சின்ன சின்ன இடங்களில் தவறவிடும் புரிதல்களால் மிகப்பெரிய அளவில் சண்டைகள் ஏற்படுகின்றன. இது போன்ற சண்டைகள் காதல் மற்றும் கல்யாண வாழ்க்கையில் ஏற்படாமல் இருக்க ஜாப்பனியர்கள் பின்பற்றக் கூடிய ஐந்து வழிமுறைகளை இங்கு காணலாம்.
சின்ன சின்ன சண்டைகளை தவிர்க்க :-
கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான புரிதல் மிகவும் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆகவே, சிறிதாக ஏதேனும் புரிதல் தவறும் பட்சத்தில் உடனடியாக அவற்றைப் பேசி சரி செய்து கொள்ள முற்படுகின்றனர். இதற்கு ஜாப்பனியர்கள் Aimai என்ற வழக்கை பயன்படுத்துகின்றனர். ஒருவேளை நேரடியாக கேட்க முடியாத விஷயமாக இருப்பின் அவற்றை எப்படி மறைமுகமாக தன் துணையின் மனம் புண்படாமல் கேட்க வேண்டும் என்பதை அறிந்து அதன் பின் கேட்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் சின்ன சின்ன சண்டைகள் தவிர்க்கப்பட்டு இல்லற வாழ்க்கையில் இனிமை கூடுகிறது.
பொறுமை மற்றும் நிதானம் :-
இவற்றை ஜாப்பனியர்கள் காமன் என்ற வழக்கை கொண்டு பயன்படுத்துகின்றனர். இவற்றிற்கான தமிழ் அர்த்தம் தான் பொறுமை அல்லது நிதானம். உறவுகளுக்கிடையே வெவ்வேறு விதமான கருத்துக்கள் எழுவது சாதாரண விஷயம் தான். ஆனால் அவற்றை உடனடியாக பேசி கருத்துக்களுக்கான விடையை தெளிவுபடுத்துவது மிகவும் அவசியம்.
நன்றி அறிதல் :-
இதனை ஜப்பானியர்கள் Itadakimasu என்ற வழக்கை கொண்டு பின்பற்றுகின்றனர். இது சாதாரணமாக ஒவ்வொருவரின் வாழ்க்கையில் இருக்கக்கூடிய நன்றி உணர்வாகும். ஒருவர் நமக்காக உணவு உடை இடம் போன்றவற்றை வழங்கும் பட்சத்தில் அவர் மீது எவ்வளவு நன்றியோடு இருப்போமோ அதே அளவிற்கு நமக்காக நம் மீது காதல் வைத்து நம்மை திருமணம் செய்து கொண்டவருக்கு எந்த அளவிற்கு நன்றி உணர்வோடு இருக்க வேண்டும் என்பதை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்க இந்த வழக்கினை இவர்கள் பயன்படுத்துகின்றனர்.
நேரம் மற்றும் இடம் கொடுத்தல் :-
திருமண வாழ்வு ஒரு நிலைக்கு பல சிரமங்களை திணிக்க தொடங்கும். அது போன்ற சூழ்நிலைகளில் கணவன் மனைவி இருவரும் தங்களுக்கு பிடித்த செயல்களில் ஈடுபாடு காட்டி தங்களுடைய தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் தங்களுடைய இல்லற வாழ்க்கையை வேறு ஒரு கோணத்தில் இருந்து சிந்திக்க இது மிகப்பெரிய ஒரு துணையாக அமைவதாக தெரிவிக்கின்றனர்.
நல்லிணக்கம் :-
இதனை ஜாப்பனியர்கள் wa என குறிப்பிடுகின்றனர். இது கணவன் மனைவி இடையே இருக்கக்கூடிய உறவை பற்றிய புரிதலையும் மகிழ்ச்சியையும் குறிப்பதாக அமைகிறது. இதை தாண்டி உறவுகளுக்கிடையே அமைதி காக்க வேண்டிய தருணங்களை குறித்தும் இருவருக்கும் இடையில் நல்ல இணக்கமான உறவு ஏற்பட முக்கியமான விஷயங்கள் குறித்தும் தெளிவுபடுத்துவதாக அமைகிறது. இந்த வழக்கத்தின் மூலம் ஈகோவை புறந்தள்ளிவிட்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நல்வாழ்வு தொடர முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.