போதை பொருள் தயாரிப்பில் 50 சட்டவிரோத ஆய்வகங்கள் கண்டுபிடிப்பு!! கடந்த 10 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரிப்பு!!

0
132
50 illegal drug manufacturing labs discovered!! 10 fold increase in last 10 years!!
50 illegal drug manufacturing labs discovered!! 10 fold increase in last 10 years!!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த மாநாடு டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா , இந்திய மக்கள் தொகையில் 7 சதவீதம் பேர் போதைப்பொருளைப் பயன்படுத்துவதாக தெரிவித்து இருக்கிறார்.

மேலும் போதை பொருள் பயன்பாடு குறித்து பேசிய அமித்ஷா தெரிவித்திருப்பதாவது :-

கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் ரூ.16,914 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தவர், 2004 முதல் 2014 வரையிலான 10 ஆண்டுகளில் 3.63 லட்சம் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அடுத்த 10 ஆண்டுகளான 2014 முதல் 2024 வரை இது 7 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது 24 லட்சம் கிலோவாக இருந்தது என்றும் கடந்த 10 ஆண்டுகளில் இது ஏழு மடங்கு அதிகரித்து ரூ.56,861 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார்.

போதை பொருள் பயன்பாட்டில் பாரம்பரிய மருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால் ரசாயன மருந்துகளை நோக்கி திரும்பி விடுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார். இவ்வாறு நடைபெறுவது இயற்கை முறை இவ்வாறு நடைபெறுவது இயற்கையான செயல் என்றும் தற்பொழுது நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட சட்ட விரோதமான ஆய்வகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக 2019 ஆம் ஆண்டு முதல் மோடி அரசன் போதை பொருளுக்கு எதிராக போராடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Previous articleHMPV வைரஸ்.. தற்பொழுது 10 மாத குழந்தைக்கு!! இந்தியாவில் இதுவரை 14 பேர் பாதிப்பு!!
Next articleபொங்கலுக்கு வீட்டு தரையை பளபளன்னு வைக்க.. இந்த டிப்ஸ் ஹெல்ப் பண்ணும்!!