அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகள் தத்தெடுப்பதாக கூறுவது மறைமுக உண்மை என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை பள்ளி கல்வித்துறை மூடி மறைத்தாலும் இதுதான் நிதர்சனமான உண்மை என கூறுகின்றனர். திமுகவில் பலர் தனியார் பள்ளிகள் நடத்திவரும் நிலையில் திடீரென்று அனைத்தையும் ஒன்றிணைக்கும் விதமாக திமுக தலைமைக் கழகச் செய்தி தொடர்பு துணை தலைவர் சங்கம் ஒன்றை தொடங்கினார்.
கட்சிக்குள்ளிருந்துக் கொண்டு தனியார் பள்ளிகளுக்கு சங்கம் அமைத்து நாங்கள் அரசு பள்ளிகளுக்கு உதவுவோம் எனக் கூறுவது கபட நாடகம் ஆடுவது போல் உள்ளது. அதேபோல இந்த சங்கத்தின் தொடக்க விழாவில் இவர்கள் சொல்வது தான் செய்திகளாக வெளிவரும். அந்த வகையில் முன்னணி பத்திரிக்கை ஊடகங்கள் இது சார்ந்து தவறு செய்திருக்க இயலாது.
அப்படி பார்க்கும் பொழுது 500 பள்ளிகளை தனியாரிடம் தாரை வார்த்து கொடுப்பது உறுதியான ஒன்றுதான். ஆனால் இதனை பொதுவெளியில் ஒப்புக்கொள்ள முடியாத காரணத்தினால் நாங்கள் அவ்வாறான ஒப்புதலை போடவில்லை என்று கூறுகின்றனர். அரசு பள்ளிக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் வேறு ஏதேனும் குழு அமைத்து அதன் மூலம் செய்யலாம்.
அதை விட்டுவிட்டு தனியார் பள்ளிகள் அனைத்தையும் இணைத்து சங்கம் அமைத்து சி எஸ் ஆர் மூலம் அரசு பள்ளிகளுக்கு உதவ போகிறோம், பங்காளர்களாக இருப்போம் எனக் கூறுவது சப்பை கட்டும் கதையாக இருக்கிறது. காலப்போக்கில் 500 அரசு பள்ளிகள் தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பது உறுதியாகும் என நெட்டிசன்கள் கூறுகின்றன.