படித்து முடித்த பின்பு வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை அமைத்துக் கொடுப்பது போல மத்திய அரசும் பிரதான் மந்திரி இன்டர்ன்ஷிப் 2025 ஆம் ஆண்டிற்கான திட்டத்தினை துவங்கியிருக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு பயன்படும் வகையில் மாதா மாதம் 5000 ரூபாய் என 12 மாதங்களுக்கு வழங்குவதுடன் ஒரு மாதத்திற்கு மட்டும் 6000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உதவித் தொகையுடன் கூடவே இந்த திட்டத்தின் கீழ் படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தனியார் நிறுவனங்களின் மூலம் பயிற்சிகளும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது ஏற்கனவே ஒருமுறை துவங்கி அதில் பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியதோடு மீண்டும் இந்த ஆண்டு 2025 பிப்ரவரி 20ஆம் தேதி பி எம் மீண்டும் இந்த ஆண்டு 2025 பிப்ரவரி 20ஆம் தேதி பிரதான் மந்திரி இன்டர்ன்ஷிப் 2025 என தொடங்கி இருப்பதாகவும் இதில் 730 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள முன்னணி நிறுவனங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் வழங்கப்பட இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இன்டர்ன்ஷிப் பயிற்சிகளில் கலந்து கொள்ள நினைக்கும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் https://pminternship.mca.gov.in/ என்ற மத்திய அரசினுடைய அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.