TN Government: விவசாயிகளுக்கு செல்போன் மூலம் பம்பு செட்டுகளை இயக்கம் கருவிக்கு மானியம்
மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கென பல்வேறு வகையான நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. விதை மானியம், உரத்திற்கு மானியம், வருடத்திற்கு ரூ.6000 உதவித்தொகை என் பல்வேறு வகையான நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்காக 50 % வழங்கும் திட்டம், பெண் விவசாயிகளுக்கு 50% மானியம் வழங்கும் திட்டம், ஆதி திராவிட விவசாயிகளுக்கு 20% அதிகமான மானியம் வழங்கும் திட்டம், இதற் விவசாயிகளுக்கு 20 % மானியம் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு வகையான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதே போல் செல்போன் மூலம் இயங்கும் பம்பு செட்டுகள் இயக்கும் கருவிக்கு அரசு மானியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் இரவு நேரங்களில் மற்றும் மழை காலங்களில் விவசாயிகள் பம்பு செட்டுகளை இயக்க செல்கிறார்கள்.
அந்த நேரத்தில் இரவில் செல்லும் போது பாம்பு கடி, விஷ பூச்சிக்கடி உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதை தவிர்க்கும் வகையில் வீட்டில் இருந்த படியே பம்பு செட்டுகளை இயக்கும் கருவிக்கு மானியம் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலமாகவே பம்பு செட்டுகளை இயக்கவும், நிறுத்தவும் உதவுகிறது.இதற்காக ஆதிதிராவிடர் மற்றும் சிறு குறு விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரமும், மற்ற விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
பழைய மின் மோட்டாரை மாற்றி புதிய மின் மோட்டார் வாங்குவோருக்கு சிறு குறு விவசாயிகளுக்கு மட்டும் அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக திருப்பூர் மாவட்டத்தில் 250 பம்புசெட்டுகளுக்கு இந்த கருவி அமைக்க இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்