மத்திய அரசு வழங்கும் ரூ.50000 கடனுதவி! விண்ணப்பிக்க இதுவே கடைசி.. உடனே முந்துங்கள்!

Photo of author

By Rupa

மத்திய அரசு வழங்கும் ரூ.50000 கடனுதவி! விண்ணப்பிக்க இதுவே கடைசி.. உடனே முந்துங்கள்!

Rupa

50000 loan provided by the central government! This is the last time to apply.. Hurry up!

மத்திய அரசு வழங்கும் ரூ.50000 கடனுதவி! விண்ணப்பிக்க இதுவே கடைசி.. உடனே முந்துங்கள்!

மத்திய அரசாங்கம்  பல்வேறு நலத் திட்டங்களை அமல்படுத்தி மக்களுக்கு கடன் உதவிகளை வழங்கி வரும் பட்சத்தில் சாலையோரம் வியாபாரிகளுக்கு ஸ்வா நிதி திட்டத்தின் மூலம் கடன் வழங்கி வருகிறது.

மத்திய அரசின் இந்த ஸ்வா நிதி திட்டம் ஆனது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிய இருந்த நிலையில், மேலும் கால அவகாசத்தை நீடித்து அடுத்த ஆண்டு டிசம்பர் மாசம் வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

சாலையோரம் வியாபாரிகள் அனைவரும் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் விண்ணப்பம் செய்த உங்களுக்கு தேவையான கடன் தொகையை பெற்றுக் கொள்ளலாம். இது குறித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத்துறை இணையமைச்சர் கௌசல் கிஷோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சாலையோர வியாபாரிகளுக்கு  ஸ்வா நிதி திட்டத்தின் கீழ் தற்பொழுது வரை 31 லட்சம் பேருக்கு கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் முதல் முறை கடன் தொகை சரிவர கட்டி முடித்தவர்கள், இரண்டாவது தொகை கடனாக 5 லட்சம் பேர் வாங்கியுள்ளனர். இரண்டும் முறையும் கடனை வாங்கி முடித்தவர்களுக்கு, மூன்றாவது முறையாக 6 லட்சம் பேருக்கு தலா ஐம்பதாயிரம் என்ற கணக்கில் கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதில் என்னற்ற சாலையோர வியாபாரிகள் பயனடைந்துள்ளதால் இந்த திட்டத்தை, அடுத்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவதற்குள் 32 லட்சம் பேருக்கு கடன் தொகை வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.