விளம்பரத்தினால் படிப்பு பாழானது! உச்ச நீதிமன்றம் அதிரடி!!

0
90
Education is ruined by advertisement! The Supreme Court is in action!!
Education is ruined by advertisement! The Supreme Court is in action!!

விளம்பரத்தினால் படிப்பு பாழானது! உச்ச நீதிமன்றம் அதிரடி!!

சமூக வலைத்தளத்தில் வந்த  தேவையற்ற விளம்பரங்களினால் தான் போட்டி தேர்வை எழுத முடியாமல் போனதாக ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த  நிலையில் அவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் போட்டித்தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் யு-டியூப் சமூக வலைத்தளத்தில் வந்த தேவையற்ற ஆபாச விளம்பரங்களால் தான் போட்டித்தேர்வில் வெற்றி பெற இயலவில்லை என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை செய்துள்ளார். தான் இதனால் பாதிக்கப்பட்டதால் அதற்கு இழப்பீடாக தனக்கு அந்த விளம்பரத்தை ஒளிபரப்பிய நிறுவனம் 75 இலட்சம் இழப்பீடாக தரவேண்டும் என்றும் அந்த மனுவில் கூறி இருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் அதனை விசாரித்த நீதிபதிகள் அந்த மனுவை தள்ளுபடி செய்ததுடன் நேரில் ஆஜரான மனுதாரர்க்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதைப்பற்றி நீதிபதிகள் கூறியது;

சமூக வலைதளத்தில் தேவையற்ற விளம்பரத்தைப்  பார்த்து உங்கள் நேரத்தை வீணடித்தது நீங்கள்! அதனால் உங்கள் கவனம் சிதறியது. எனவே இதன் மூலம் தான் உங்களால் போட்டித்தேர்வு எழுத முடியவில்லை என்று கூறுவது ஏற்புடையதாக இல்லை. இது நியாயமும் இல்லை.

விளம்பரங்கள் பார்ப்பது அவரவர் தனிப்பட்ட உரிமை, விருப்பம். உங்களுக்கு பிடிக்கவில்லையெனில் அவற்றினை தவிர்த்து விடலாமே? எதற்காக அவற்றினை பார்க்க வேண்டும்? எனவே எந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இது போன்ற மனுவை தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக மனுதாரர்க்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். பிறகு மனுதாரர் வருத்தம் தெரிவித்ததை அடுத்து 25 ஆயிரம் ரூபாயாக அபராதம் குறைக்கப்பட்டது.