இந்த நான்கு நகரங்களுக்கு மட்டும் 5ஜி சேவை! ஜியோ நிறுவனம் வெளியிட்ட தகவல்!

Photo of author

By Parthipan K

இந்த நான்கு நகரங்களுக்கு மட்டும் 5ஜி சேவை! ஜியோ நிறுவனம் வெளியிட்ட தகவல்!

கடந்த ஒன்றாம் தேதி டெல்லி பிரகதி மைதானத்தில் நடைப்பெற்ற ஆறாவது இந்திய கைப்பேசி மாநாட்டை மோடி  தொடங்கி வைத்தார்.கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஐஐடிகள் ,பெங்களூர் விஞ்ஞான தொழில்நுட்ப நிறுவனம் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் நிறுவனமானது சமீர் போன்றவைகள்  தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.அதன் பிறகு 5ஜி சேவை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

5ஜி சேவை நாட்டின் முக்கிய  நகரங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அதன் பிறகு அடுத்த ஒரு சில ஆண்டுகளில் படிப்படியாக 5ஜி சேவையானது விரிவு படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தசரா பண்டிகையை முன்னிட்டு இந்தியாவின் நான்கு நகரங்களில் 5 ஜி சேவை இன்று முதல் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

மும்பை ,டெல்லி ,கொல்கத்தா மற்றும் வாரணாசியில் இன்று முதல் சோதனை அடிப்படையில் 5ஜி சேவையை தொடங்கவுள்ளதாக ஜியோ நிறுவனம்  அறிவித்துள்ளது.மேலும் இது தொடர்பாக அந்த நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் இந்த நான்கு நகரங்களில் ஜியோவின் ட்ரு 5ஜி பீட்டா சேவை 1 ஜிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 5ஜி சேவைகளை பெற புதிய சிம் தேவையில்லை எனவும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.