நேபாளத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று நண்பகல் 2.25 மணிக்கு 4.6 அளவில் ரிக்டர் அளவில் பூகம்பம் பதிவு செய்யப்பட்டது.இந்த நிலநடுக்கத்தில் மக்கள் பெரிதளவு அச்சமடைந்தனர்.அதனைத் தொடர்ந்து மீண்டும் நண்பகல் 2.51 மணி அளவில் 6.2 லிட்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது புவி மையத்தின் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நேபாளத்தின் இந்நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தியாவின் வட பகுதிகளிலும் வலுவான நில அதிர்வு உணரப்பட்டது இதனை குறித்து மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.
இது ஓர் சீற்றத்தின் அறிகுறியா என்பது பல்வேறு ஆராய்ச்சியாளர்களாலும் ஆராயப்பட்டு வருகிறது.இயற்கை எனும் மாபெரும் சக்தியினை நம்மால் எதிர்க்க முடியாது.ஆனால் பேரிடர் மேலாண்மை முன்னேற்பாடுகளை சரியாக செய்தால் பல்வேறு அப்பாவி விலங்குகளையும்,பொதுமக்களையும் பாதுக்காக்கலாம்.