சென்னையில் இருக்கக்கூடிய பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறை நாட்களை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் 6 நாட்கள் சிறப்பு கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறது.
அதன்படி, பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியின்பொழுது சி ப்ரோக்ரமிங் பயிற்சி வழங்கப்பட இருப்பதாகவும் இதற்கான கட்டணம் 1500 ரூபாய் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான பயிற்சி வகுப்பானது அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைசார் கல்லூரியான குரோம்பேட்டை எம் ஐ டி வளாகத்தில் இருக்கக்கூடிய டாக்டர் கலாம் கணினி மையத்தில் நடைபெற இருப்பதாகவும் இதற்கான நாள் மே 12 முதல் 17ஆம் தேதி வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி வகுப்பில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் மொத்தமாக இந்த பயிற்சி வகுப்பில் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதலில் வரக்கூடிய மாணவர்களுக்கே முன்னுரிமை என்றும் சி ப்ரோக்ரமின் குறித்த அடிப்படை விஷயங்கள் டேட்டா முறைகள் கணிதம் மற்றும் தற்கவியல் செயல்பாடுகள் டேட்டா ஒழுங்குபடுத்துதல் ஆவண மேலாண்மை நினைவக ஒதுக்கீடு போன்றவை இந்த வகுப்பில் கற்றுத் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவல்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தொலைபேசி எண் – 044- 22516012 , 22516317