ஒரு நொடியில் பறிபோன 6 உயிர்!! மது போதை மயக்கத்தில் காரை ஓட்டிய மாணவர்கள்!!

Photo of author

By Vijay

uttarakhand: நள்ளிரவில் மது குடித்து விட்டு காரை வேகமாக இயக்கயத்தில் லாரி மீது மோதி 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலி.

உத்தரகண்ட் மாநிலத்தில் நள்ளிரவு கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதியதில் 6 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்கு முன் மது குடித்து விடு காரை இயக்கிய சம்பவம்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடுன் அருகில் உள்ள ஒ என் ஜி சி சவுக் என்ற பகுதியில் நள்ளிரவு அதிகாலை 1:30 மணியளவில் கோர விபத்து நடந்துள்ளது. இதில் அதிவேஈமாக வந்த கார் ஒன்று லாரியின் பின்புறம் மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

சத்தம் கேட்டு அருகில் இருக்கும் மக்கள் வந்து பார்த்த போது அந்த காரில் வந்த 7 மாணவர்களில் 6 மாணவர்கள் உடல் நசுங்கியும், உடல் பாகங்கள் தனி தனியே சிதறியும் உயிரிழந்தனர். ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.

இந்த விபத்திற்கு முன் அந்த காரை ஒட்டி வந்த மாணவர்கள் மது குடித்து பார்டியில் கலந்து கொண்ட பிறகு வீட்டிற்கு செல்லும்போது விலை உயர்ந்த காரை முந்தி செல்ல துரத்தி சென்றுள்ளனர். அப்போது காரில் செல்லும்போதே அவர்கள் மதுகுடித்துகொன்டே காரை ஓட்டியுள்ளனர். அப்படி செல்லும்போது சரக்கு லாரி பின்புறம் மோதியதில் உடல் நசுங்கி இறந்ததாக கூறப்படுகிறது. இந்த காரை ஓட்டியவர் மது குடித்தாரா என்பது தெளிவாக தெரியவில்லை என்று கூறபடுகிறது.