WEIGHT LOSS செய்ய நீங்கள் பின்பற்ற வேண்டிய 6 விஷயங்கள்!! இதை செய்தால் உடல் எடை டக்குனு குறையும்!!

Photo of author

By Divya

WEIGHT LOSS செய்ய நீங்கள் பின்பற்ற வேண்டிய 6 விஷயங்கள்!! இதை செய்தால் உடல் எடை டக்குனு குறையும்!!

Divya

இந்த காலகட்டத்தில் உடல் எடை கூடுவது சாதாரண விஷயமாக மாறிவிட்டது.உடலில் தேவையற்ற கொழுப்புகள் ஒன்று சேர்வதால் உடல் பருமனாகிறது.உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்தலுக்கு முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம்தான்.

சர்க்கரை உணவுகள்,கார்போ ஹைட்ரேட் உணவுகள்,எண்ணெய் உணவுகள் உடலில் எல்டிஎல் கொழுப்பை அதிகரித்துவிடும்.உடலில் அதிக கொழுப்பு சேர்ந்தால் பக்கவாதம்,மாரடைப்பு,சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகள் அதிகரித்துவிடும்.உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல் இருக்க நாம் சில வகை ஆரோக்கியம் தரும் பழக்கங்களை பின்பற்ற வேண்டும்.

நமது உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்புகள் கரைய பின்பற்ற வேண்டிய பழக்கங்கள்:

1)தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.வேகமாக நடப்பதால் உடலில் இருக்கின்ற அதிகப்படியான கலோரிகள் குறையும்.

2)தினமும் அரை மணி நேரம் உடலில் வியர்வை வெளியேறும் படியான வேலை செய்தால் சீக்கிரமாக உடல் எடை குறையும்.

3)ஆரோக்கியமான உணவுமுறை பழக்கத்தை பின்பற்றி வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு சேராமல் இருக்கும்.

4)போதுமான அளவு தூக்கத்தை அனுபவிக்க வேண்டும்.தினமும் 8 மணி நேர உறக்கத்தை கட்டாயம் உறங்க வேண்டும்.

5)உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும் வாரம் ஒருவேளை விரதம் இருக்கலாம்.சீரான உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கலாம்.

6)சமச்சீர் உணவு பழக்கத்தை பின்பற்றி வந்தால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.க்ரீன் டீ,மூலிகை பானங்களை பருகலாம்.