அம்மாவின் மறு உருவமே கொண்டாடும் ஆதரவாளர்கள்! கெத்து காட்டும் எடப்பாடி பழனிச்சாமி!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் பலவிதமான வியூகங்களை வகுத்து அதன்படி செயல்பட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் பல யுத்திகளை கையாண்டு வருகிறார்கள்.அப்படிப் பார்த்தோமானால் தற்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் யுத்திகளை அப்படியே கையாண்டிருக்கிறார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அவருடைய செயல்பாடு இருந்து வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த சமயத்தில் என்னதான் அதிமுக மீது மக்களிடையே அதிருப்தி அலை இருந்தாலும் கூட தேர்தல் என்று வந்துவிட்டால் அது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபுறம் தேர்தல் நடக்கும் சமயத்தில் அதிமுகவை எதிர்த்து நின்ற அனைத்து வேட்பாளர்களும் தோல்வியை தழுவி இருக்கிறார்கள். இது கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் சரி, 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் சரி, தமிழக மக்கள் பார்த்து வியந்த ஒரு விஷயமாக இருந்து வருகிறது.

அதற்கு காரணம் என்ன என்று விசாரணை செய்தால் ஒரு தேர்தலில் நின்று வெற்றி பெற்று 5 வருடங்கள் எம்எல்ஏவாக அல்லது அமைச்சர்களாக இருந்தால் அடுத்த தேர்தலில் அவர் போட்டியிடலாமா வேண்டாமா என்பதை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கனகச்சிதமாக கணித்து விடுவாராம்.ஒரு அமைச்சர் இருந்தால் அவருக்கு மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு நன்மதிப்பு இருக்கிறது. மக்கள் மத்தியில் அவருடைய வாக்கு சதவீதம் எவ்வாறு இருக்கிறது. இந்த தொகுதியில் அவர் நிற்கலாமா அல்லது வேண்டாமா என்பது உள்ளிட்ட அனைத்தையும் கச்சிதமாக கணித்து அதன்படியே தேர்தல் சமயத்தில் வேட்பாளர்களை அறிவிப்பார் முதலமைச்சர் ஜெயலலிதா.

ஒருவேளை மக்களிடையே அந்த அமைச்சர்களுக்கு அல்லது சட்டசபை உறுப்பினர்களுக்கும் நன் மதிப்பு இல்லை என்று தெரிந்தால் சற்றும் யோசிக்காமல் அடுத்த நொடியே அவர்களை ஒதுக்கி வைத்து புதிதாக ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்து விடுவாராம். இதுதான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தேர்தல் யுக்தியாக இருந்து வந்திருக்கிறது.
அவ்வாறு புதிய முகங்களை களமிறக்கி தேர்தலை சந்தித்தாலும் புதிதாக நிற்பவர்களும் கூட அந்த தேர்தலில் அமோக வெற்றியை பெற்று விடுவார்களாம் இப்பொழுது அதே பாணியை தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடைப்பிடிப்பதாக சொல்கிறார்கள்.

அந்த விதத்தில் சென்ற தேர்தலில் போட்டியிட்ட பலருக்கு இந்த முறை வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதற்கு டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் என்ற காரணத்தால், வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஓபிஎஸ் ஆதரவாளர் என்பதால் வாய்ப்பு வழங்கப்படவில்லை. என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமியின் திட்டம் இதுவாகத்தான் இருந்து வருகின்றதாம்.

ஆனால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்த சமயத்தில் வேட்பாளர்களை மாற்றி நிறுத்தினாலும் கட்சியில் சலசலப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வார். ஏனென்றால் அவர் கட்சியில் செலுத்திய அதிகாரம் அப்படி இருந்ததாக சொல்கிறார்கள். ஆனால் தற்சமயம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு சில நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்ற காரணத்தால், ஆங்காங்கு மறியல் போராட்டம் போன்றவை நடந்து வருகிறது.

என்னதான் போராட்டங்கள் நடந்தாலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடைப்பிடித்த அதே பாணியை இப்பொழுது முதல்வராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி கடைபிடித்து வருவது நிச்சயமாக பலன் அளிக்கும் என்று தெரிவிக்கிறார்கள்.ஆகவே என்னதான் போராட்டங்கள் ஒருபுறம் நடந்தாலும் கூட முதலமைச்சரின் துணிச்சலான இந்த நடவடிக்கையின் காரணமாக, எதிர் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக ஒரு மிகப்பெரிய வரலாற்று வெற்றியை பெறும் என்று சொல்கிறார்கள்.