68 செவிலியர் பணிகள் – நேரடி நியமனம்

Photo of author

By Kowsalya

சேலம், அரசு மோகன் குமரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று சிகிச்சைக்காக கூடுதலாக 300.க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சிகிச்சை பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் 3 மாத காலத்துக்கு தற்காலிகமாக 90 செவிலியர்கள் கூடுதலாக நேரடியாக நியமிக்கும் பணி வருகின்றன. இதுவரையில் 22 செவிலியர்கள் புதிதாக ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள 68 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக சேருவதற்கு பி.எஸ்.சி நர்சிங் பட்டப்படிப்பு, டிப்ளமோ நர்சிங் படிப்பு முடித்து தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் செவிலியராக பதிவு செய்திருக்க வேண்டும்.

 

விருப்பம் உள்ளவர்கள் உரிய அசல் ஆவணங்களுடன் சேலம் அரசு மோகன் குமரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் வருகை தந்து விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.