அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு என்பது சட்டமானது – ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!

0
129

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து பல தரப்பில் கருத்துகள் பேசப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. 

மதுரை உயர் நீதிமன்றம் நடப்பாண்டிலேயே உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து பல கேள்விகளை முன்வைத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்புகளில் அதாவது எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். உள்பட அனைத்து இளநிலை படிப்புகளுக்கும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளார். 

ஆனால் ஆளுநர் அனுமதி வழங்குவதற்கு காலதாமதம் ஆனதால் பல தரப்பிலிருந்து கேள்விகள் எழுப்பப்பட்டது. ஆளுநர் மாளிகையில் இருந்து தாமதத்திற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார். அந்த காரணம் என்னவென்றால், “தமிழக அரசு கூறும் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது சட்டத்திற்கு இசைவானதா?” என்று சொழிசிட்டர் ஜெனரல் இடம் கேள்வி கேட்டு கடிதம் எழுதியுள்ளார். 

அந்தக் கடிதத்திற்கு பதில் தற்போதுதான் கிடைத்துள்ளதாகவும், கிடைத்தவுடன் அந்த பதிலை நேரடியாக அறிவித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். என்ன பதில் என்றால், “அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது சட்டத்திற்கு இசைவானது தான்” என்பதேயாகும்.

அதுமட்டுமன்றி தமிழகத்தில் 50 மருத்துவக்கல்லூரி நிறுவனங்களும், ஏறத்தாழ 7200 இடங்களும் உள்ளன. அதில் இந்த 7.5% என்பது 300க்கும் மேற்பட்ட இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleநடப்பாண்டிலேயே 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!
Next articleதீபாவளிக்கும் அதிமுக பரிசு வழங்குமா? – மக்கள் எதிர்பார்க்கிறார்களா?