நடப்பாண்டிலேயே 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

0
63

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது : “அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு நடப்பு ஆண்டிலேயே வழங்கப்படும்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து பல விவாதங்கள் நடத்தப்பட்டது. இறுதியில் அனைத்து கட்சி சார்பிலும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த மனு ஆளுநர் பரிசீலனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

தற்போது ஆளுநர் இந்த உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்ற அனுமதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பசும்பொன்னில் செய்தியாளர்களிடம் கூறியதாவது : “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு நடப்பாண்டிலேயே வழங்கப்படும்” என்று உறுதியாக தெரிவித்துள்ளார். 

அதுமட்டுமன்றி “தான் ஒரு அரசு பள்ளி மாணவர் என்றும் அரசு பள்ளி மாணவர்களின் உணர்வுகள் தனக்குப் புரிகிறது என்றும் அதனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை  உடனடியாக நிறைவேற்றி உள்ளதாகவும்  தெரிவித்துள்ளார். 

ஆளுநரின் ஒப்புதல் கிடைப்பதற்கு தாமதமான காரணத்தை, திமுக கட்சி உட்பட வேறு எந்தக் கட்சிகளும் தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  தற்போது நடப்பாண்டிலேயே இத்திட்டத்தை செயல்படுத்தி விட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

author avatar
Parthipan K