தமிழ்நாட்டில் இன்னும் 7 நாட்களுக்கு மழை!! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!! 

0
131
7 more days of rain in Tamil Nadu!! Information released by Chennai Meteorological Department!!
7 more days of rain in Tamil Nadu!! Information released by Chennai Meteorological Department!!

தமிழ்நாட்டில் இன்னும் 7 நாட்களுக்கு மழை!! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!! 

தமிழ்நாட்டில் இன்று முதல் இன்னும் ஏழு நாட்களுக்கு மழை இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.

வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதியில் நிலவி வருகிறது. அதையடுத்து மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று   முதல் 7 நாட்களுக்கு  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.

அடுத்ததாக 26.07.2023, 27.07.2023 வரை தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் லேசான மழை முதல் மிகவும் கனமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Previous articleவிபத்தில் சிக்கிய பயணிகள் விமானம்!! காரணம் குறித்து விசாரணை!!
Next articleமுன்னாள் முதல்வர் பற்றி அவதூறு பேச்சு!! விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் மீது வழக்கு!!