7 வயது சிறுமி 17 வயது சிறுவன்! சிறுமிக்கு காட்டுக்குள் நடந்த வன்கொடுமை!
வளர்ந்து வரும் காலகட்டத்தில் பெண் பிள்ளைகளை வெளியே அனுப்ப பெற்றோர்கள் பயந்து வருகின்றனர். யாரையும் நம்பி விட்டு செல்லவும் அச்சம் அடைகின்றனர். ஏனென்றால் வயது வரம்பின்றி எந்த பெண்பிள்ளைகளை பார்த்தாலும் காம கொடூரர்கள் பாலியல் தொல்லை கொடுத்து அவர்களுக்கு துன்பம் அழைத்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி நாம் நம்பி விட்டு செல்லும் ஆட்களே நமது குழந்தைகளுக்கு எமனாக இருந்து விடுகின்றனர்.அதேபோல மற்றொரு புறம் நமது வீட்டில் வளரும் ஆண் பிள்ளைகள் சரியான வழியில் தான் செல்கிறார்களா என்று அவ்வப்போது கவனிக்க பெற்றோர்கள் மறந்து விடுகின்றனர்.
அவ்வாறு விடும் பட்சத்தில் அந்த ஆண் பிள்ளைகள் பல வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பார்த்து தீய பழக்கத்தை பழகுவதற்கு தள்ளி விடுகின்றனர். அவ்வாறு சேலம் அருகே தற்பொழுது ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. சேலத்தில் உள்ள ஒரு பகுதிதான் தாரமங்கலம்.தாரமங்கலம் ஊரை சேர்ந்த ஒரு சிறுமி,இவர் 7 வயது உடையவர். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். ஏழு வயது குழந்தையின் வீட்டின் அருகில் இருக்கும் மாணவர் தான் மகேஷ் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). அந்தப் பெண்ணை விளையாடுவதற்காக 17 வயது சிறுவன் முதலில் அழைத்துள்ளார்.
அதனையடுத்து அந்த 17 வயது சிறுவன் அவரது வீட்டின் அருகிலுள்ள காட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்ததை சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்ட பெற்றோர் திகைத்து போய் நின்றனர். அதனையடுத்து தாரமங்கலம் காவல் நிலையத்தில் அச்சிறுமியின் பெற்றோர்அந்த 17 வயது சிறுவன் மீது பாலியல் தொல்லை புகார் அளித்தனர்.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.