சித்த மருத்துவத்தால் குணமான 70வயது தந்தை: கொரோனாவிற்கான சித்தா சிகிச்சை பற்றி விளக்கும் மகன்

Photo of author

By Parthipan K

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 வயது முதியவருக்கு முக்கால்வாசி நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சித்த மருத்துவத்தின் மூலம் குணம் அடைந்துள்ளார். இவர் அடிப்படையில் நீரிழிவு நோயாளி ஆவார்.

அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளைப் பற்றி அவரது மகன் நரேந்திர ரெட்டி விளக்கம் அளித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் தொழிலதிபராக இருந்துவருபவர் பிரசாத் ரெட்டி. இவருக்கு 70 வயதாகியுள்ள நிலையில், கடந்த ஜூலை 28ஆம் தேதி கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியானது. இவருக்கு முதலில் எந்த அறிகுறியும் தெரியவில்லை. 28-ம் தேதி தான் அவர் மயங்கி விழுந்தார். அதன்பிறகு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது, அப்போது பரிசோதித்த போதுதான் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாக இருப்பது தெரிந்தது.

அதற்குள்ளேயே அவருக்கு முக்கால்வாசி நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தது. மேலும், ஆக்சிஜன் அளவு 82 க்கும் கீழ் குறைந்து போனதால் காப்பாற்றுவது கடினம் என அருகிலுள்ள கிளினிக்கில் கூறினார்கள்.

அதன் பிறகு எனது நண்பரின் பரிந்துரையில் சென்னையில் உள்ள ஜவஹர் பொறியியல் கல்லூரியில் கொரோனா சிகிச்சைக்காக சித்த மருத்துவ முறையில் சிறப்பு மருத்துவமனையாக ஏற்பாடு செய்திருந்தது. அங்கு சேர்த்தபோது அந்த மருத்துவமனையின் மருத்துவர் வீரபாபு, ஃபெரிட்டின், டி டைமர் போன்றவை அதிகமாக இருப்பதாக தெரிவித்தார்.

அதன்பிறகு அவருக்கு சித்த மருத்துவ முறையில், கசாயம் மற்றும் சித்த மருந்துகளைக் கொடுத்தார். மேலும் அவரின் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கான மாத்திரைகளும், விட்டமின் சத்துக்கள் நிறைந்த மாத்திரையும் கொடுத்து வந்தார்.

நாளுக்கு நாள் எனது தந்தையின் உடல் நிலை சீராகி வந்தது. சிகிச்சை அளித்த ஆறாவது நாளில் ஆக்சிஜன் அளவு பெருமளவு அதிகரித்து இருந்தது.

ஏழாவது நாளில் அதுவும் இல்லாமலேயே சுவாசித்தார், பிறகு ஒன்பதாவது நாளில் எழுந்து நடக்க ஆரம்பித்தார்.

நீரிழிவு நோயாளியான இவருக்கு தேவைப்பட்ட போது மட்டுமே அலோபதி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் எனது தந்தை கொரோனாவில் இருந்து மீண்டு வந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், பாரம்பரிய சித்த மருத்துவ முறைகளை அரசு ஊக்குவிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.