நான் உங்க பாட்டி என்ன விட்டுருங்க என்று கதறிய மூதாட்டி! இறுதியில் நடந்த சோகம்!

Photo of author

By Kowsalya

நான் உங்க பாட்டி என்ன விட்டுருங்க என்று கதறிய மூதாட்டி! இறுதியில் நடந்த சோகம்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 70 வயது மூதாட்டியை இளைஞர்கள் கும்பலாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கண்ணாஜ் என்ற பகுதியில் உறவினர்கள் அனைவரும் வீட்டினுள் இருந்த பொழுது வெளியே தூங்கிக் கொண்டிருந்துள்ளர் பாட்டி. 70 வயது மூதாட்டி என்று தெரிந்தும் இளைஞர் கும்பல் பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் மூக்கு மற்றும் தாடை வாய் பகுதிகளை சேதப்படுத்தியுள்ளனர்.

குடும்பத்தினர் யாரும் புகார் அளிக்கப்படாத நிலையில், விஷயத்தை அறிந்த உடன் காவல்துறையினர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து கண்ணாஜ் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரசாந்த் வர்மா கூறுகையில், குடும்பத்தினர் யாரும் புகார் அளிக்கவில்லை. மூதாட்டியின் பேரன் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அக்கம்பக்கத்தினர் மூலம் தகவல் அறிந்த போலீசார் தாமாகவே முன்வந்து எப்ஐஆர் பதிவு செய்தோம் என கூறியுள்ளார்.

வீட்டின் உள்ளே மருமகள், பேரன் ஆகியோர் இருந்தபோதிலும் வெளியே தூங்கி கொண்டிருந்த பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அங்கு மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

மேலும் காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து இருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன. மேலும் இது நகைக்காக ஏற்பட்ட குற்றமா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூதாட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, பாலியல் பலாத்காரம் செய்த ஆண்களை அடையாளம் காட்டுவதாக அந்த மூதாட்டி கூறியுள்ளார்.