ஒரு சமோசா அரை மணி நேரத்தில் சாப்பிட்டால் 71000 ரூபாய் பரிசு!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சமோசா வியாபாரி!!

0
99
71000 rupees prize if you eat a samosa in half an hour!! The samosa seller who announced the action!!
71000 rupees prize if you eat a samosa in half an hour!! The samosa seller who announced the action!!
ஒரு சமோசா அரை மணி நேரத்தில் சாப்பிட்டால் 71000 ரூபாய் பரிசு!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சமோசா வியாபாரி!!
ஒரே ஒரு சமோசாவை அரை மணி நேரத்தில் அதாவது 30 நிமிடத்தில் சாப்பிடும் நபருக்கு 71000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று சமோசா வியாபாரி ஒருவர் அறிவித்துள்ளார்.
சமோசா வியாபாரத்தை பெருக்குவதற்காக உத்திரப் பிரதேசம் மாநிலம் மீரட்டை சேர்ந்த சமோசா வியாபாரி அவர்கள் பிரம்மாண்டமான பெரிய சமோசாவை தயாரித்துள்ளார். இதற்கு பாகுபலி சோமோசா என்று பெயர் வைத்த அந்த சமோசா வியாபாரி தான் அரைமணி நேரத்தில் இந்த பிரம்மாண்ட பாகுபலி சமோசாவை சாப்பிடும் நபருக்கு 71000 ரூபாய் பரிசு தருவதாக அறிவித்துள்ளார்.
உத்திர பிரதேசம் மாநிலம் மீரட்டில் சமோசா கடை நடத்தி வருபவரான சுபம் கவுசால் அவர்கள் மூன்றாவது தலைமுறையாக சமோசா கடையை நடத்தி வருகிறார். இவரது கடையில் வியாபாரத்தை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும் ஏதாவது வித்தியாசமாக செய்ய முடிவு எடுத்துள்ளார். இவரது கடையில் சமோசா மிகவும் பிரபலம்.
இதையடுத்து சமோசா வியாபாரி சுபம் கவுசால் அவர்கள் பெரிய பெரிய சமோசாக்களை தயார் செய்து விற்பனைக்காக வைத்தார். முதலில் 4 கிலோ எடையுள்ள சமோசாவை தயாரித்த இவர் 8 கிலோ எடையுள்ள சமோசாவை தயாரித்தார். இவர் தற்போது 12 கிலோ எடையுள்ள சமோசாவை தயாரித்து வருவதாகவும் இதன் விலை 1500 ரூபாய் நிரண்யம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
வாடிக்கையாளர்கள் பலரும் தங்களது பிறந்த நாளை கொண்டாடுவதற்கு இந்த பிரம்மாண்ட பாகுபலி சமோசாவை ஆர்டர் செய்கின்றனர். இதை அடுத்து சமோசா வியாபாரி சுபம் கவுசல் அவர்கள் ஒரு போட்டியை அறிவித்துள்ளார். யார் ஒருவர் 30 நிமிடத்திற்குள் இந்த 12 கிலோ எடையுள்ள பாகுபலி சமோசாவை சாப்பிட்டு முடிக்கிறாரோ அவருக்கு 71000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.