73 வது குடியரசு தினம்; டெல்லியில் முப்படைகள் அணிவகுப்பு!

Photo of author

By Vijay

நாட்டின் 73-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் ராணுவ மற்றும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்புகள் நடக்க உள்ளன. இந்தியா 1947 இல் சுதந்திரம் அடைந்த நிலையில், 1950 இல் குடியரசாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி இந்தியாவில் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.

குடியரசு தினத்தை முன்னிட்டு, தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை மரியாதை செலுத்த உள்ளார். அங்கு இருக்கும் போர் வீரர்களின் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார். பின்னர் விஜய் சவுக் பகுதியில் இருந்து ராஜபாதை வழியாக முப்படை அணிவகுப்பு நடக்க உள்ளது.

இந்த அணிவகுப்பின், மரியாதையை தேசியக் கொடியை ஏற்றிய பின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொள்வார். மேலும் 25 அலங்கார ஊர்திகள் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ளும்.