சிக்கிம் மாநிலத்தில் கொரோனாவுக்கு முதல் பலி!

Photo of author

By Parthipan K

சிக்கிம் மாநிலத்தில் கொரோனாவுக்கு முதல் பலி!

Parthipan K

sikkim covid19 firdt death

சிக்கிம் மாநிலத்தில் இதுவரை கொரோனா நோய் தோற்றால் 499 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஜூலை 25ஆம் தேதி வரை அம்மாநிலத்தில் இதுவரை யாரும் கொரோனா நோய் தொற்றால் பலியாகவில்லை.

ஆனால் தற்பொழுது கிழக்கு சிக்கிம் மாவட்டம்  ரோங்லி பகுதியை சேர்ந்த 74 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சர் துடோப் நம்பியால் நினைவு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

ஏற்கனவே, அவர் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது இறுதி சடங்குகள் அரசின் வழிமுறையை பின்பற்றி செய்யப்பட்டது என்று அம்மாநில சுகாதாரத் துறை தலைவர் டாக்டர். பெமா டி பூட்டிமா கூறியுள்ளார்.

இதுகுறித்து மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா நோயாளியின் மரணத்தால் மிகுந்த வருத்தமுற்றதாகவும், நோய்த்தொற்று பரவாமல் இருக்க தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை மக்கள் தொடர்ந்து பின்பற்றவும், மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.