இன்று 75 ரூபாய்க்கு சினிமா டிக்கெட் என்ற அறிவிப்பு தமிழகத்திற்கு பொருந்தாது:! காரணம் இதுதான்!!

Photo of author

By Pavithra

இன்று 75 ரூபாய்க்கு சினிமா டிக்கெட் என்ற அறிவிப்பு தமிழகத்திற்கு பொருந்தாது:! காரணம் இதுதான்!!

Pavithra

இன்று 75 ரூபாய்க்கு சினிமா டிக்கெட் என்ற அறிவிப்பு தமிழகத்திற்கு பொருந்தாது:! காரணம் இதுதான்!!

சர்வதேச சினிமா தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் சினிமா டிக்கெட்டின் விலை 75 ரூபாய் என்ற அறிவிப்பு தமிழகத்திற்கு பொருந்தாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் சர்வதேச சினிமா தினத்தை முன்னிட்டு அனைத்து திரையரங்குகளிலும்,வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி சினிமா டிக்கெட் விலை ரூ 75-க்கு விற்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது.தற்போது இந்த அறிவிப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.அதாவது மாநில அரசின் சில விதிமுறைகளால் சினிமா தினம் தமிழகத்திற்கு செல்லாது என மல்டிபிளக்ஸ் அசோசியேசன் அறிக்கையை வெளியிட்டுள்ளது.தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா,கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் இது பொருந்தும் என்றும் டிக்கெட் விலையில் எந்தவித மாற்றமும் இல்லையென்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.