ஒரு கிளாஸ் சுடுநீரில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து கலந்து குடித்தால் கிடைக்கும் 8 நன்மைகள்!!

0
127

அன்றாட வாழ்வில் பால் சம்மந்தப்பட்ட பொருட்கள் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.நெய்,மோர்,வெண்ணெய்,பாலாடை,சீஸ்,தயிர் என்று பாலில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களும் அதிக மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.

இதில் வெண்ணெய்யில் இருந்து பிரித்தெடுக்கப்படும் நெய் நல்ல கொழுப்பு நிறைந்த பொருளாக உள்ளது.நெய்யில் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது.இந்த நெய்யை நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு சில நன்மைகள் கிடைக்கும்.

நெய் சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்துவிடும் என்று பலரும் பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.உண்மையில் நெய் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.நெயில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் நெய் கலந்து குடித்தால் உடலுக்கு என்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

1)காலையில் வெது வெதுப்பான தண்ணீரில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடித்தால் உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்புகள் கரையும்.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நெய் ட்ரிங்க் எடுத்துக் கொள்ளலாம்.

2)காலையில் வெறும் வயிற்றில் சுடுநீரில் நெய் கலந்து குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.செரிமானப் பிரச்சனை சரியாக நெய் ட்ரிங்க் குடிக்கலாம்.

3)சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க நெய் ட்ரிங்க் குடிக்கலாம்.நெய்யை சருமத்தில் தடவினால் வறட்சி,சுருக்கங்கள் நீங்கும்.

4)நெய் பானம் சளி,இருமலை குணப்படுத்த உதவுகிறது.காய்ச்சல்,ஜலதோஷம் இருப்பவர்கள் நெய்யை சுடுநீரில் கலந்து குடிக்கலாம்.

5)நெய் கலந்த தண்ணீரை குடித்து வந்தால் மூளை ஆரோக்கியம் மேம்படும்.மூளை செயல்திறன் அதிகரிக்க இந்த ட்ரிங்க் குடிக்கலாம்.

6)சூடு நீரில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடித்தால் உடலில் இருக்கின்ற அதிகப்படியான கொழுப்புகள் கரையும்.

7)உடலில் தேங்கி இருக்கும் அழுக்கு கழிவுகள் வெளியேற நெய் கலந்து தண்ணீரை குடிக்கலாம்.

8)கண் பார்வை திறன் அதிகரிக்க நெய் பானம் பருகலாம்.டீ,காபிக்கு பதிலாக இந்த நெய் பானத்தை குடித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Previous article80 வயதில் 20 வயது வலிமை கிடைக்க.. பாலில் இந்த பொடி கலந்து தினமும் குடிங்க!!
Next articleநம்மை அசர வைக்கும் அரச மரம் எனும் மூலிகை!! இலை முதல் வேர் வரை என்னென்ன நோய்க்கு மருந்து?