8 விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!
கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் ,புதுச்சேரி ,காரைக்கால் போன்ற இடங்களில் கனமழை பெய்து வந்தது.நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது அதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.
கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது.காய்கறி ,பூக்கள் விலைகள் அதிகரித்ததால் மக்கள் அவதி அடைந்தனர்.இந்நிலையில் கனமழையின் காரணமாக சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று அதிகாலை 4.45 மணியளவில் புறப்படும் ஐதராபாத் விமானம் ,காலை 6.15மணிக்கு மதுரை செல்ல கூடிய விமானம் ,மதியம் 1.10 மணிக்கு கர்னூல் செல்ல கூடிய விமானம் மற்றும் மாலை 5.10 மணிக்கு செல்ல கூடிய விமானம் என நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
மேலும் அதிகாலை மும்பையில் இருந்து வரும் விமானம் காலை 9.30 மணிக்கு மதுரையில் இருந்து வரும் விமானம் மாலை 4.20மணிக்கு கர்னூலில் இருந்து வர வேண்டிய விமானம் மற்றும் இரவு 8.30 மணிக்கு மதுரையில் இருந்து வரும் நான்கு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதனையடுத்து சென்னையில் இருந்து பிராங்க்பர்ட் ,இலங்கை ,பாரீஸ், தோகா ,சார்ஜா ,துபாய் மற்றும் அந்தமான் போன்ற இடங்களுக்கு செல்லும் விமானங்கள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.