குடிமகன்கள் போட்ட ரூ 10 யில் 8 ரூபாய் பிச்சை முதல்வர் குடும்பத்துக்கு தான்.. நாயையே மிஞ்சும் ஸ்டாலினின் நன்றி விசுவாசம் – சிவி சண்முகம் காட்டம்!!

Photo of author

By Rupa

குடிமகன்கள் போட்ட ரூ 10 யில் 8 ரூபாய் பிச்சை முதல்வர் குடும்பத்துக்கு தான்.. நாயையே மிஞ்சும் ஸ்டாலினின் நன்றி விசுவாசம் – சிவி சண்முகம் காட்டம்!!

செந்தில் பாலாஜியின் அனைத்து இடங்களிலும் அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டு பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து அவரை விசாரணைக்கு அழைத்த பொழுது சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை. மேற்கொண்டு கைது நடவடிக்கையின் போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வாறு செந்தில் பாலாஜி ஒத்துழைப்பு ஏன் வழங்கவில்லை உடனடியாக நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தது எதனால் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அந்த வகையில் எதிர்க்கட்சியான அதிமுக மாஜி அமைச்சர்கள் இது குறித்து கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். இவ்வாறு அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டியும் தற்பொழுது வரை இலாகா இல்லாத அமைச்சராக அவர் தொடர்வார் என ஸ்டாலின் கூறியது பெரும் அனைவர் மத்தியிலும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பேட்டியில், கூடிய விரைவிலேயே கவர்னர் டெல்லி சென்று திமுக ஆட்சியை உடைக்க நடவடிக்கை எடுப்பார் என்றும் அன்றைக்கு தான் தமிழகத்திற்கு தீபாவளி என கூறினார்.

இவரைப் போலவே தற்பொழுது சிவி சண்முகம் அவர்களும், ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் ஒரு மது பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வாங்குவதாக புகார்கள் வந்தது. இந்த பத்து ரூபாயில் எட்டு ரூபாய் முதல்வர் குடும்பத்துக்கு தான் செல்கிறது. அமலாக்கத்துறையினர் விசாரணையில் செந்தில் பாலாஜி இதனையெல்லாம் கூற நேரிடும் இதனால் பல அமைச்சர்கள் சிக்குவர். அதேபோல இந்த எட்டு ரூபாய் வைத்து பயனடையும் முதல்வர் குடும்பம் கூட சிறைக்கு செல்லும் வாய்ப்பு உண்டாகும். இந்த காரணத்தினால் தான் அவரை பதவியில் இருந்து நீக்காமல் இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்க வைத்து பார்த்து வருகின்றார் என குற்றம் சாட்டியுள்ளார்.