இரண்டு நாட்களில் 8 ஆயிரம் பேரா?

0
192

இரண்டு நாட்களில் 8 ஆயிரம் பேரா?

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து மின்சார ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது.

அதில், மின்சார ரயில்களில் பயணம் செய்வோர் கட்டாயமாக இரண்டு தவணை கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்தி இருக்க வேண்டும். மற்றும் பயணிகள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகளை காட்டினால் மட்டுமே பயணிச்சீட்டு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

மேலும் டிக்கெட் பரிசோதகர் கேட்கும் போது இரண்டு தவணை கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும் என  அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து பயணிகள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் முக கவசம் அணியாத ரயில் பயணிகளுக்கு ஐநூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அதில் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இந்த கட்டுப்பாடுகள் கடந்த 10ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்த மாதம் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மின்சார ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் ஆய்வு மேற்கொண்டதில் சிலரிடம் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இல்லாமல் இருந்தது தெரிய வந்ததாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து அவர்களுக்கு ரயிலில் பயணம் செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மேற்கொண்ட சோதனையில் சுமார் 8 ஆயிரம் பேர் சிக்கியதாகவும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous articleதடுப்பூசி போடுவதில் இவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்!
Next articleகொரோனா பாதிப்பால் சிறிதான ஆணுறுப்பு! இளைஞர் வெளியிட்ட பகீர் தகவல்!