பிரேம்ஜி ஹீரோ, 80 வயது கிழவி வில்லி: பிக்பாஸ் ரேஷ்மா காதலி

0
89

பிரேம்ஜி ஹீரோ, 80 வயது கிழவி வில்லி: பிக்பாஸ் ரேஷ்மா காதலி

நடிகர் பிரேம்ஜி ஹீரோவாகவும் அவருக்கு காதலியாக பிக்பாஸ் புகழ் ரேஷ்மாவும் 80 வயது கிழவி ஒருவர் வில்லியாகவும் நடிக்க இருக்கும் படம் ஒன்று தமிழில் உருவாகி வருகிறது.
ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா என்பவர் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் பிரேம்ஜி ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தின் நாயகியாக வெப்சீரிஸில் நடித்த நடிகை ஒருவர் அறிமுகமாகிறார். மேலும் பிக்பாஸ் புகழ் ரேஷ்மா, பிரேம்ஜியை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் மாயாக்கா என்ற 80 வயது கிழவி ஒருவர் வில்லியாக நடிக்க இருப்பதாகவும் அவரது நகைச்சுவைத்தனமான வில்லத்தனத்தை சமாளிக்க முடியாமல் பிரேம்ஜி திணறுவது தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது. இந்த படம் முழுக்க முழுக்க அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமங்களில் படமாக இருப்பதாகவும் நாளை முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் அடுத்த 30 நாட்களுக்கு பகுதியில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கிராம பகுதிகளில் காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்கள் எப்படி இயங்குகிறது என்பது நகர்ப்புற வாசிகளுக்கு தெரியாது என்றும் அதை வெட்டவெளிச்சமாக்குவதே இந்த படத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சங்கள் கொண்ட இந்த படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாக உள்ளது.