800க்கும் மேற்ப்பட்ட பிஞ்சுகள் பலியான சம்பவம்! தவிக்கும் பிரேசில் மக்கள்!
பிரேஸிலில் முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா வின் இரண்டாவது அலை குழந்தைகளை தாக்கும் என்று ஏற்கனவே மருத்துவ நிபுணர்கள் தெரிவித்த நிலையிலும் இந்தியா மற்றும் பிரேசில் அதை மேம்போக்காக எடுத்துக் கொண்டு விட்டது என்றே கூறலாம்.
இரண்டாவது அலை வேகமாகப் பரவி மக்களை கொன்று குவித்து வருகிறது.முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நோய் எதிர்ப்பாற்றல் மிகவும் குறைவாக இருக்கும் என்பதால் என்னவோ கொரோன அவர்களை முதலில் தாக்கி விடுகிறது.
கடந்த கொரோனா அலையிலும் அதிகமாக பாதிக்கப்பட்டது பிரேசில் தான். அதேபோல பிரேசில் நாடு இந்த இரண்டாவது அலையிலும் சிக்கி பரிதவித்து வருகின்றது.
பெரியவர்கள் சிறியவர்கள் என வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் தாக்கி கொன்று குவித்து வருகிறது. இதுவரை கொரோனா வைரஸ் ஏற்பட்டதிலிருந்து 832 குழந்தைகள் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இதில் மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் அனைத்து குழந்தைகளும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள்.